26.04.2013.
தந்தை செல்வாவின் நினைவு தினம்– தந்தை செல்வாவின் 33ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 9.00 மணிக்கு தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் அவர்களின் தலைமையில் தந்தை செல்வா சதுக்கத்தில் நினைவுதின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந் நிகழ்வில், தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மத குருமார்களின் ஆசியுரையினைத் தொடர்ந்து, நீதியமைச்சர் ரவூக் ஹக்கீம் அவர்கள் நினைவுப் பேருரையினை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தந்தை செல்வாவின் புதல்வர் எஸ் சந்திரகாசன், எம்.கே.சிவாஜிலிங்கம், இந்திய துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.