வவுனியா நகர சபையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் சில தீயில் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வவுனியா நகரசபை உறுப்பினர்கள் சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது கையொப்பம் இடப்படுகின்ற பதிவேட்டுப் புத்தகமே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது. தீயில் எரிந்த நிலையில் பதிவேட்டுப் புத்தகத்தின் சில பகுதிகள் மக்களால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகரசபை உறுப்பினர் ஒருவரை நகரசபையில் இருந்து இடைநிறுத்துவதற்கான முயற்சிகள் நகரசபை நிர்வாகத்தாலும் சில நகரசபை உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில அவ் உறுப்பினர் ஒழுங்காக கூட்டங்களுக்கு வருவதில்லை என்பதை வெளிப்படுத்துவதற்கான கையொப்பம் இடப்படுகின்ற பதிவேட்டுப் புத்தக ஆவணமே எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகரசபைத் தலைவர் ஜ.கனகையா இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் நகரசபைச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் அவர்களிடம் கோட்டபோது, இது

இதேவேளை, உண்மையான ஆவணங்கள் தான் எரிக்கப்பட்டவை என்று கண்டு பிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர் சட்ட ரீதியான பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என நகரசபைச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.