பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு வலியுறுத்தல்– நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
முழுமையாக அமுலாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ,லங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ப்ரெண்டன் ஓ கொனர் வலியுறுத்தியுள்ளார்.கொழும்பில் ஊடகத்தினரிடம் கருத்து வெளியிட்ட அவர், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதே, ,லங்கையின் எதிர்காலத்துக்கு நன்மையாக ,ருக்குமெனவும், அவுஸ்திரேலிய அரசும் ,தனையே எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். ,தேவேளை ,லங்கையில் ,ருந்து அகதிகள் கடத்தப்படுகின்றமை தொடர்பில் கடற்படையினருக்கும், அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ப்ரெண்டன் ஓ கொனருக்குமிடையில் பேச்சுவர்த்தை நேற்று ,டம்பெற்றுள்ளது. கடற்படையின் கட்டளைத்தளபதி வைஸ் எட்மிரல் ஜெயந்த கொலம்பகே மற்றும் ப்ரெண்டன் ஓ கொனருக்கு ,டையிலான ,ச்சந்திப்பு ,டம்பெற்றுள்ளது ,தன்போது ஆட்கடத்தல்களை தடுப்பதற்கு கடற்படையினர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை ப்ரெண்டன் ஓ கொனர் வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கச்சதீவை மீட்போம் என தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்– கச்சதீவை மீட்போம் தமிழக மீனவர்கள்மீது ,லங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களை தடுக்க கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ,ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும்போது ,லங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும் தொடர்ந்து ,ன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ,ந்நிலை மாற வேண்டுமானால் கச்சத்தீவை மீட்பது மட்டுமே வழி என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ,தன்படி கச்சத்தீவை மீட்டு ,ந்திய ஆளுகையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானம் முதல்வர் ஜெயலலிதாவால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மனித உரிமைக்குழு பிரதிநிதிகள் கமலேஷ் ஷர்மா சந்திப்பு– லண்டன் சென்றுள்ள ,லங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழு, பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலர் கமலேஷ் ஷர்மாவை சந்தித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த ஆர்.பீ.பெரேரா மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மாஹாநாமஹோ உள்ளிட்டோர் ,க்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் அழைப்பின்பேரில் லண்டன் சென்றுள்ள ,க்குழு, ,லங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கமலேஷ் ஷர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ,தன்போது மனித உரிமைகள் ஆணைக்குழு அடைய வேண்டிய ,லக்குகள் தொடர்பில் கமலேஷ் ஷர்மா குழுவினருக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது

தமிழக அகதிகள் முகாம்களில் அறிவுறுத்தல்– ,லங்கை அகதிகள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதை தடுக்கும் வகையில் ,ந்திய கடலோர காவற்துறையினர் தமிழக அகதி முகாம்களில் அறிவுறுத்தல்களை முன்னெடுத்து வருகின்றனர். ,ந்நிலையில், மண்டபம், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட பல முகாம்களில் ,ந்த அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியா செல்வபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலே ,த்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ,தனிடையே, தமிழக அகதி முகாம்களில் சோதனையிடப்பட்டும் வருகின்றன. ,துதவிர, அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் எனவும், அங்கு செல்பவர்கள் ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் எனவும் தமிழக கடலோர காவற்துறையினர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளனர்.

,லங்கை ,ந்திய உறவில் பாதிப்பில்லை-அசோக் கே காந்தா ,லங்கைக்கும் ,ந்தியாவுக்கும் ,டையில் சந்தர்ப்ப
சூழ்நிலைகள் காரணமாக முரண்பாடுகள் ஏற்படுகின்ற போதிலும், அதனால் ,ரு நாடுகளுக்குமிடையிலான நிலையான உறவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என ,ந்தியா தெரிவித்துள்ளது. ,லங்கைக்கான ,ந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா ,தனைத் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் ,லங்கை அரசுக்கு எதிராக பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்ட போது, ,லங்கைக்கு எதிரக செயற்பட வேண்டிய நிலை ,ந்தியாவுக்கு ஏற்பட்டது. எனினும் ,து ,லங்கை ,ந்திய உறவில் தாக்கத்தை செலுத்தவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

கனடாமீது அரசாங்கம் குற்றச்சாட்டு– போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் ஊடாக, கனடா ,லங்கைக்கு எதிரான சக்திகளை வளப்படுத்துகிறது என ,லங்கை குற்றம் சுமத்தியுள்ளது. கனடாவுக்கான ,லங்கை உயர்ஸ்தானிகர் சித்ரங்கனி வகீஸ்வரா ,தனைத் தெரிவித்துள்ளார். கனடா தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை ,லங்கைமீது முன்வைத்து வருவதால், அவை ,லங்கையின் மறுசீரமைப்பு மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் எந்த சாதகத் தன்மையையும் ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை ,லங்கையில் நடத்துவது தொடர்பில் கனடா எதிர்ப்பினை வெளியிட்டு வருவதுடன், ,லங்கைமீது குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றது. ,ந்நிலையிலேயே உயர்ஸ்தானிகர் சித்ரங்கனி மேற்சொன்ன கருத்தினை தெரிவித்துள்ளார்.