அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளர் சந்திப்பு

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரியவுக்கும் இடையேயான சந்திப்பு இன்றுமாலை 3மணியளவில் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது. 2013ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பிலே இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது. இதன்போது உத்தேச வட மாகாண தேர்தலுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. மற்றும் கட்சி பெயர் மாற்றம், கட்சியின் சொத்து விபர சமர்ப்பிப்பு, 2013ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தம் மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டதாக தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.