Header image alt text

சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண புளொட் தலைவர், பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சந்திப்பு- dplf

Tissaசிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்களை புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச் செயலர் திரு.சிறீதரன் ஆகியோர்  வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில் கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சிறிதரன் ஆகியோர், பாராளுமன்ற சிரேஷ்ட அமைச்சரும், தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் மிகத் தீவிரமாக செயற்பட்டு வருபவருமான அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள் தெரிவுக்குழுவில் நியமிக்கப்படவில்லையென்பதை சுட்டிக்காட்டி, தாங்கள் போன்றவர்கள் தெரிவுக்குழுவில் இல்லாததனால் தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது என்பதையும் எடுத்துக் கூறினார்கள்.
எப்படியிருந்தாலும் தானும், தனது கட்சியும் (இலங்கை சமசமாஜக் கட்சி) மற்றும் இடதுசாரி கட்சிகளும் மிக தீவிரமாக இந்த 13ஆவது திருத்தத்தில் மாற்றம் கொண்டு வருவதை தடுப்பது சம்பந்தமாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதிலும் தொடர்ந்தும் தீவிரமாக உழைப்பதாகவும், சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையினை எதிர்க்க வேண்டுமெனவும் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள் கூறியுள்ளார். அத்துடன் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை 13ஆவது திருத்தம் தொடர்பாக இங்கிருக்கின்ற இடதுசாரி கட்சிகள் மற்றும் 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு எதிராக இயங்கக்கூடியவர்கள், மேலும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று அக்கறைப்படுகின்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்றவர்களைச் சந்தித்து உரையாடி வருவதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் சிரேஸ்ட அமைச்சர் டியூ குணசேகர அவர்களையும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் திரு.சிறீதரன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கொழும்பில் சந்திப்பு-

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் சனிக்கிழமை மாலை 5மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், பிரசன்னா, புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் பத்மநாதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்கென அண்மையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மேற்படி தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்வதில்லையென முடிவெடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக விரிவான ஓர் அறிக்கையினை விரைவில் வெளியிடுவதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அடுத்தவாரம் கூடிப் பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

30.06.2013.
23ஆவது தியாகிகள் தினம், கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்பு-

eprlfஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் (ஈ.பி.ஆர்.எவ்.எவ்) அனுஷ்டிக்கப்பட்டுவரும் தியாகிகள் தின நிகழ்வின் 23ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்றுமுற்பகல் 10.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முன்னாள் செயலாளர் நாயகம் அமரர் க.பத்மநாபா அவர்களின் உருவப் படத்திற்கு மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. இதன்படி வீ.ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சர்வேஸ்வரன், குலசேகரம் என பலரும் அஞ்சலி உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து சுமார் 125 வறிய மாணவர்களுக்கு தலா 3,000 ரூபாய் வீதம் இலங்கை வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் தலா ஒரு லட்சம் ரூபாய் வழக்குவதன் முதற்கட்ட உதவியாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 25,000 ரூபாய் வீதம் வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி உதவிகள் பிரான்ஸ் மற்றும் லண்டனைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகளாலும், ஜேர்மன் நாட்டின் ரி.ஆர்.ரி வானொலி நிறுவனம் ஊடாக சேகரிக்கப்பட்டும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச, நகர சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பெருந்தொகையானோர் பங்கேற்றிருந்தனர்.

News

Posted by plotenewseditor on 29 June 2013
Posted in செய்திகள் 

29.06.2013.

மணலாறில் தமிழர் நிலங்களில் புதிய சிங்கள கிராமம்;-

malnalaruமுல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு  பிரதேசத்தில் இலங்கைப் படையினரின் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, புதிய சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை, ரணவிரு பியச சம்பத்நுவர என்ற மாதிரிக் கிராமத்தை இலங்கைப் படையினருக்கு உருவாக்குவதற்காக காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் 80 பேர்ச் காணித் துண்டுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் 52 இலங்கைப் படையினரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டுதலில், வன்னிப் படைகளின் தலைமையகத்தினால், இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அரசாங்கத்திற்கு அடிபணியப் போவதில்லை- அமைச்சர் வாசு-

vasuஅரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணியப் போவதில்லை எனவும், அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதுமில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களுக்கான கூட்டத்தில், மாகாண சபை அதிகாரங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருக்குமாறு வழங்கிய ஆலோசனை தனக்கு பொருந்தாது எனவும் அமைச்சர் வாசுதேவ குறிப்பிட்டுள்ளார். மாகாண சபை உள்ளிட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக நான் கொண்டுள்ள நிலைப்பாட்டை விட்டு கொடுக்க எனக்கு எந்த எண்ணமும் இல்லை. நான் கொண்டுள்ள நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்க போகிறேன். நான் சிறீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்புடையவர் அல்ல. நான் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் என அமைச்சர் வாசு மேலும் கூறியுள்ளார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை-

kks1990ம் ஆண்டு மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் காலங்களில் சர்வதேச ரீதியில் டென்டர்களை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபன மற்றும் சீமெந்து நிறுவன தலைவர் சட்டத்தரணி என்.எஸ்.எம்.சம்சுதீன் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதால் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் அளவை நூற்றுக்கு 25 வீதம் குறைக்க முடியும் என சட்டத்தரணி என்.எஸ்.எம்.சம்சுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செல்லும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்-

இலங்கை செல்லும் அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட பயண அறிவுறுத்தல்களின்படி, இலங்கையில் அதிக குற்றச் செயல்களும், வெளிநாட்டவர்களுக்கு எதிரான நேரடி பாலியல் துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு பயணிக்கும் வெளிநாட்டு பயணிகளின் கடவுச்சீட்டு விபரங்கள் உள்ளிட்ட விபரங்களை அவர்கள் தங்கியுள்ள இடங்களின் உரிமையாளர் அல்லது முகாமையாளர்களுக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இலங்கையில் தங்களின் விபரங்களை உரிய இடங்களுக்கு வழங்கி, தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

சர்வதேச சுயாதீன விசாரணைகள் அவசியம்-நவநீதம்பிள்ளை-

navneethamஇலங்கையின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் நவநீதம்பிள்ளையின் இலங்கைக்கான மேற்படி விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சி-

வவுனியா வடக்கு பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சி நெறிகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, வவுனியா வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. உதவி பிரதேச செயலர் வி.ஆயகுலன் தலைமையில் இடம்பெற்ற இப்பயிற்சி நெறியில், பொது அரச ஊழியர்கள் அனர்த்தத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், அனர்த்தத்தில் மக்களுக்கு பணியாற்றுவது, அனர்த்தத்தின் போது முதலுதவிகள் வழங்குதல் போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேலைத்திட்டங்கள், அதற்கு பொதுமக்களினால் வழங்கப்பட வேண்டிய பங்கபளிப்புகள் என்பன தொடர்பிலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

வாக்காளர் பதிவு ஜூலை 05ம் திகதிவரை நீடிப்பு-

election boxவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாக்காளர்களாக பதிவு செய்யப்படாதவர்கள், வாக்குப் பட்டியலில் தங்களை பதிவுசெய்து கொள்வதற்கான காலம் ஜுலை 5ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே வாக்காளர் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த பட்டியல் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் செயலகங்களில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இதனை பரிசீலனை செய்து, பதிவில் இல்லாதவர்கள் மீள்பதிவு விண்ணப்பங்களை நிரப்பி, மாவட்ட தேர்தல்கள் காரியாலயங்களில் சமர்ப்பிக்குமாறு, தேர்தல்கள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது உள்வாங்கப்பட்டுள்ள வாக்காளர்கள் தொடர்பில் முறைபாடுகள் காணப்படின், அதற்கான முறைபாடுகளை ஜுலை 5ம் திகதிக்கு முன்னர் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸியிலிருந்து மேலுமொரு தொகுதியினர் நாடு கடத்தல்

australienஅவுஸ்திரேலியாவில் இருந்து மேலும் ஒருதொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இலங்கையர்கள் 22பேர் நேற்றையதினம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ப்ரென்டன் ஓ கோனர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி அவுஸ்திரேலியாவில் இருந்து இதுவரை காலமும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 270ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 1057 பேர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள் என்று கூறப்படுகின்றது.

பிரிட்டன் பிணைப் பணத்தை நீக்க வேண்டுமென கோரிக்கை-uk

பிரிட்டன் இலங்கையை ஆபத்தான நாடாகப் பட்டியலிட்டமையால் இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு செல்வோர் பிணைப் பணமாக 3000 பவுண்ஸ் செலுத்த வேண்டுமென்பதை நீக்குமாறு அரசாங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பான விவாதமொன்றை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம பிரிட்டனுக்கான உயர்ஸ்தானிகருடன் இன்றையதினம் நடத்தவுள்ளார். இதன்போது இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தமது கோரிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. இலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து பிரிட்டன் செல்வோர் பிணைப்பணமாக 3000 பவுண்டுகள் செலுத்த வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இருந்து விலகுவதில்லை-முஸ்லிம் காங்கிரஸ்-

Hekeem13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள போதும், அரசாங்கத்திலிருந்து விலகப் போவதில்லை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதன் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் இதனைத் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை சீரமைக்க முற்படும் அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது. எனினும் இதற்கான எதிர்ப்பினை அரசாங்கத்தில் இருந்து கொண்டே வெளிப்படுத்துவதாகவும், அதனை காரணமாக வைத்து அரசாங்கத்திலிருந்து விலகப் போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு-slmc&tna

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையக காரியாலயமானதாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றுள்ளது பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இதன்போது தற்போதய அரசியல் சூழ்நிலை, சிறுபான்மை சமூகங்கள் அதிகாரப் பகிர்வின் உச்ச பயன்களை அடையக்கூடிய வழிமுறைகள், 13ஆவது சட்ட திருத்தத்திற்கு ஏதிராக எழுந்துள்ள சவால்கள் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இராணுவப் பயிற்சிகளை அதிகரிப்பது குறித்து பாகிஸ்தான் இலங்கை ஆராய்வு-sri paki

பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஜெனரல் அஷ்பாக் பாவெஸ் கயானிக்கும் இலங்கை இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் ஆராயப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்குகள், இரு நாடுகளிலுமுள்ள உயர்கல்வி வாய்ப்புகள், இலங்கையின் இராணுவ பயிற்சி திட்டமான கொமொறன் (நீர்க்காகம்) தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளது. இருநாட்டு இராணுவ அதிகாரிகளிடையே இருபக்க புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணம் என்பவற்றை மேலும் விரிவாக்குவதுபற்றி இதன்போது முக்கியமாக பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பரிந்துரைகளை

அமுல்செய்யும் விடயத்திற்கு பொதுநலவாய நாடுகள் ஆதரவு-chogm

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான சகல ஒத்துழைப்புகளையும் வழங்க பொதுநலவாய நாடுகள் தயாராக இருப்பதாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். லண்டன் பினான்சல் ரைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய  செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்கு பின்னரான நடவடிக்கைகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். சர்வதேசம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்ப்படுத்தப்படவில்லை என்ற வாத பிரதிவாதங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொதுநலவாய நாடுகள், அதனை உரிய முறையில் அமுல்படுத்த சகல ஒத்துழைப்புகளையும் இலங்கைக்கு வழங்க தயாராக உள்ளது என பொதுநலவாய நாடுகளின் செயலர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13 தொடர்பான வாக்கெடுப்பை புறக்கணிக்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்Hekeem

13ம் திருத்தச் சட்டத்தின்மீதான திருத்தங்கள் குறித்து மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் வாக்களிப்பில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காதென தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தத சட்டம்மீதான திருத்தங்கள் குறித்த பிரேரணை வடமேல் மாகாண சபையில் முன்வைக்கப்பட்டபோது, கட்சியின் அறிவிப்புக்கு புறம்பாக வாக்களித்த இரு உறுப்பினர்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. ஏற்கனவே 13ம் திருத்தச் சட்டத்தின்மீதான திருத்தங்களை எதிர்ப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்நிலையில் குறித்த பிரேரணை கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் வாக்கெடுப்புக்கு வரும்போது முஸ்லிம் காங்கிரஸ் வாக்கெடுப்பை புறக்கணிக்குமென தெரியவருகிறது.

யாழில் சட்ட ஒழுங்கு விதிகளை அமுல்செய்வதில் பொலீசார் அசமந்தம்-jaffna police

யாழ். குடாநாட்டில் சட்ட ஒழுங்கு விதிகளை பொலீசார் உரிய முறையில் இன்னமும் அமுல்படுத்தவில்லையெனவும் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றபோது சட்டத்தின்கீழ் தண்டிக்க முடியாதென பொலீசார் தெரிவிக்கின்றமையால் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்பு சபைக் கூட்டத்திலேயே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்.குடாவில் சட்டவிரோத மணல் அகழ்வு தடையின்றி நடைபெற்று வருகிறது. இவற்றைத் தடுக்க பொலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. கிராமங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிற நேரங்களில் பொலீசார் சம்பவ இடங்களுக்கு செல்வதில்லையென பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் என்றும் சிவில் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

படகுகளில் வருவோரை திருப்பி அனுப்புவது இந்தோனேசிய உறவை பாதிக்கும்-ஆஸி-australien

அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வருபவர்களை திருப்பி அனுப்புவதற்கு பழைமைவாத எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனையானது இந்தோனேசியாவுடனான பிணக்கைத் தூண்டிவிடும் அபாயமுள்ளதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் கெவின்ருத் இன்று தெரிவித்துள்ளார். அவர் பிரதமராக மீள நியமிக்கப்பட்டதற்கு பின்னர் இடம்பெற்ற தனது முதல் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் படகுகளில் வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் விவகாரம் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்தோனேசிய ஜனாதிபதி சுஸிலோ பம்பாங்யதோயனோவை தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கெவின்ருத் தெரிவித்துள்ளார்.

 

pikku.buddist monkஇலங்கையின் சிறுபான்மை இனங்கள் மீது இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் பொதுபல சேனா அமைப்பு தாக்குதல் நடத்தும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுபல சேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், ஜுலை மாதத்தில் வரும் எசல போயாவிற்கு முன்பாக இந்நாட்டில் இயங்கும் சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாது போனால் நாங்கள் இந்நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர் என்ற ரீதியில் சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன் இனிவரும் காலங்களில் சிங்களக் கிராமங்களுக்குள் நுழையும் அந்நிய இனத்தவர்களை அடித்து விரட்டும் நோக்கில் பௌத்த பாதுகாப்பு குழுவொன்றை அனைத்து சிங்களக் கிராமங்களிலும் உருவாக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டியு குணசேகர புளொட் தலைவர், பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சந்திப்பு-ep sugu du kunasekara Sithar plote
சிரேஷ்ட அமைச்சர் டி.யு.குணசேகர அவர்களை புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச் செயலாளர் திரு.சிறீதரன் ஆகியோர் நேற்று பிற்பகல் சந்தித்து 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சடமூலத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பில் புளொட் முக்கியஸ்தர் திரு.ராகவன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

சுமார் 01 மணி 30 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சிறிதரன் ஆகியோர்,  13ஆவது திருத்தம் தொடர்பாக இங்கிருக்கின்ற இடதுசாரி கட்சிகள் மற்றும் 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு எதிராக இயங்கக்கூடியவர்கள், மேலும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று அக்கறைப்படுகின்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்றவர்களைச் சந்தித்து உரையாடி வருகின்றோம். இதன் ஒரு கட்டமாகவே தங்களையும் சந்தித்து கலந்துரையாட வந்திருக்கின்றோம் என்பதைத் தெரிவித்தனர்.

13ஆவது திருத்தத்தினை மாற்றியமைக்கக் கூடாதென்பதில் அமைச்சர் டியூ குணசேகர அவர்கள் தீவிரம் காட்டுகின்றமைக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்  கொண்டதுடன், 13ஆவது  திருத்தத்தை  மாற்றியமைக்கும் நடவடிக்கையினைத் தோற்கடிப்பதற்கான வழிமுறைகள் உபாயங்கள் தொடர்பிலும் அமைச்சருடன் மிகவும் ஆழமாக கலந்துரையாடினர். மற்றும் 13ஆவது திருத்தத்தினை மாற்றும் நடவடிக்கைகளுக்கு அமைச்சர் காட்டிவரும் முழுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் மேலும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டுமென்றும் அமைச்சரிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

1987ஆம் ஆண்டு 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லாது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டு அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் அமைச்சர் டியூ குணசேகர அவர்கள் முக்கியமானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 13 திருத்தக்குழுவில் திஸ்ஸ விதாரணவின் பெயர் நீக்கம்-du kunasekara

13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்படாமை அரசாங்கம் நினைத்து செய்த தவறில்லை என்றால், அது அரசாங்கத்தின் இனவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் என லங்கா சமசமாஜ கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவிக்குழுவிற்கு, திஸ்ஸ விதாரணவையும் பெயரிட வேண்டும் என  லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதிச்செயலர் அனில் டி சொய்சா அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் பிரதிநிதிகள், தெரிவுக்குழுவில் இடம்பெற செய்யப்பட்டுள்ளபோதிலும் லங்கா சமசமாஜ கட்சி மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. இது பாரிய அநீதியாகும். இது அரசாங்கத்தில் உள்ள இனவாத சக்திகளின் அழுத்தங்கள் காரணமாக வேண்டுமொன்றே செய்யப்பட்டதாகும் அனில் டி சொய்சா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்காளராகும் கால அவகாசம் நிறைவு-election box

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் தமது பெயர்களை இணைத்துக்கொள்வதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளது இதற்காக ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எல்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் குறித்த பெயர்ப் பட்டியல்களை குறித்த பகுதிகளிலுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பெயர்களை இணைத்துக்கொள்ள முடியாதவர்கள் அடுத்தமாதம் 5ஆம் திகதிவரை மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு முடியுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவத்தளபதி இலங்கைக்கு விஜயம்- மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஜெனரல் அஷ்பக் பார்வஸ் கயானி இன்றுமாலை இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பையேற்று இங்கு வருகை தந்த ஜெனரல் கயானி, இலங்கையின் முக்கிய இராணுவத் தளங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், நாளை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் பதுளை, தியத்தலாவ இராணுவ பயிற்சி முகாமில் நடைபெறவுள்ள விஷேட நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி, முப்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

News

Posted by plotenewseditor on 27 June 2013
Posted in செய்திகள் 

விருப்பமில்லாதவர்கள் அரசிலிருந்து வெளியேறிச் செல்லலாம்-ஜனாதிபதி- mahinda

அரசாங்கத்தின் கொள்கைகளையும், தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு அரசில் இருப்பவர்கள் இருக்கலாம். அதில் முரண்பாடு இருப்பவர்கள் உள்ளிருந்து சதிவேலைகளைச் செய்யாமல் விரும்பிய நேரத்தில் வெளியேறலாம். அதற்கு எதுவித தடைகளும் கிடையாது என ஜனாதிபதி மகிநத ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளுங்கட்சி அங்கத்தவர்களின் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மூன்றிலிரண்டு பெரும்பான்மைப்பலம் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக நாட்டுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு எவரின் உதவியையும் நாடி, அதில் தங்கியிருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ஆளும் கட்சியின் பங்காளிகள் தீர்மானங்களை ஆதரிக்கத் தயங்குவது குறித்து தனது விசனத்தையும் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களை நாடுகடத்த சுவீடன் தீர்மானம்-

உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுவீடனில் தஞ்சமடைந்துள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தப்போவதாக சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தாம் இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் சுவீடன் அரசு குறிப்பிட்டுள்ளது. சுவீடன் அரசு இந்நடவடிக்கை குறித்து எழுத்துமூலமாக இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. அத்துடன் சுவீடனில் தங்கியுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையார்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றையும் நடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு குடிவரவு திணைக்களம் அறிவித்திருக்கிறது.

நாடளாவிய ரீதியில் 210 பாலங்களை நிர்மாணிப்பதற்கு திட்டம்-

நாடளாவிய ரீதியில் கிராமப்புற பாதைகள் ஊடாக 210 பாலங்களை நிர்மாணிப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை மாத்தளை மாவட்டத்தில் முதலில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சின் கிராமப்புற பாலம் நிர்மாணத்துறை திட்டத்தின் இணைப்பதிகாரி பொறியியலாளர் சந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார். மகநெகும அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களுக்கான பாலங்களை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த வருடத்திற்குள் சுமார் 70 பாலங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏனைய எஞ்சிய பாலங்கைள அடுத்த வருடத்திற்குள் நிறைவுசெய்ய எண்ணியுள்ளோம் என இணைப்பதிகாரி பொறியியலாளர் சந்தன குணதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸி. செல்ல முயன்றவர்கள் கைது-Australia[1]

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கடற்பரப்பின் ஊடாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 23பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுவாஞ்சிக்குடி பொலீஸ் நிலைய அதிகாரிகளால் இவர்கள் இன்று அதிகாலை 5.30 அளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 6 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் 9 சிறுவர்கள் அடங்குகின்றனர். இவர்கள் வவுனியா, வென்னப்புவ, பிங்கிரிய, மாரவில, செட்டிக்குளம் மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். களுவாஞ்சிக்குடி நீதவான் முன்னிலையில் இவர்களை ஆஜர்செய்ய பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 தெற்கிலேயே தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர்-பிரதமர்-

வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் பார்க்க தெற்கில் அதிக தமிழர்கள் வாழ்வதால் நாட்டை பிளவுபடுத்துவதற்கான தேவையில்லை என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சிலரும் உள்நாட்டில் உள்ள சிறு அரசியல் கட்சிகளுமே வேறு நாட்டுக்கு வலியுறுத்துவதாகவும், அவர்களின் குறுகிய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் இடமளிக்காது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கண்டி, உன்னஸ்கிரிய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே பிரதமர் டி.எம்.ஜயரத்ன இதனைக் கூறியுள்ளார்.

யாழில் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பு-

யாழ்.மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை மரணப் பதிவேட்டு குறிப்பறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. யாழில் கடந்த 2012ஆம் ஆண்டைவிட தற்போது 06மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட இரு மடங்காக இருப்பதாகவும் அந்த மரணப் பதிவேடு குறிப்பறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்கொலை அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை, மற்றும் பொருளாதார நெருக்கடி, குடும்ப வன்முறை, கடன் தொல்லை, தொழில் வாய்ப்பின்மை, காதல் தோல்வி மற்றும் கள்ளக்காதல், இளவயதுத் திருமணங்கள், விவாகரத்து, திருமணத்திற்கு முன்னரான குழந்தைபிறப்பு என்பன அடிப்படைக் காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி இந்த தற்கொலை வீதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் உளவள நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக யாழ். வைத்தியசாலை அறிவித்துள்ளது

ஜனாதிபதி தான்சானியாவுக்கு விஜயம்-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஆப்பிரிக்க இராஜ்ஜியமான தான்சானியாவிற்கு இன்றுகாலை சென்றுள்ளார். இலங்கை ஜனாதிபதியொருவர் தான்சானியாவுக்கான பயணத்தை மேற்கொள்கின்றமை இதுவே முதன்முறையாகும். இதுதவிர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீஷெல்ஸ் தீவிலும் ஒருநாள் தங்கியிருப்பார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. இருதரப்பு வர்த்தக, பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறைகளில் மேம்பாடு குறித்து ஜனாதிபதி மற்றும் தான்சானி அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
 

News

Posted by plotenewseditor on 26 June 2013
Posted in செய்திகள் 

ஆஸி, தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பில் ஜூலியா கில்லாட் தோல்வி-_rudd_gillard

அவுஸ்திரேலியாவின் ஆளும் தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பில் அந்நாட்டுப் பிரதமர் ஜூலியா கில்லாட்டை தோற்கடித்து கெவின் ரட் வெற்றி பெற்றுள்ளார். இந்த வாக்கெடுப்பில் கெவின் ரட் 57வாக்குகளையும், பிரதமர் ஜூலியா கில்லாட் 45வாக்குகளையும் பெற்றிருந்தனர். தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பினை நடத்துமாறு கட்சியின் சந்திப்பில் கெவின் ரட்டின் ஆதரவாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து ஜுலியா கில்லாட் வாக்கெடுப்பினை நடத்தினார். இதேவேளை, 2010ஆம் ஆண்டு கட்சியின் தலைமைத்துவத்திற்கான வாக்கெடுப்பில் ஜூலியா கில்லாட் வெற்றி பெற்றிருந்தார். இந்த வாக்கெடுப்பில் தோல்வியடையும் பட்சத்தில் பதவிதுறக்க தயாராகவுள்ளதாக இருவரும் இதற்குமுன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

13இல் இரு சரத்துக்களை ரத்துச் செய்ய சுதந்திரக் கட்சி தீர்மானம்-13

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இரண்டு ஏற்பாடுகளை ரத்து செய்யவேண்டும் என்ற உத்தியோகபூர்வ தீர்மானத்தை சிறீலங்கா சுதந்திரக்கட்சி இன்று எடுத்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில், அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான சிறீலங்கா சுதந்திர கட்சி இந்த விவகாரத்தில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன்பிரகாரம், 13ஆவது திருத்தத்தில் இரண்டு ஏற்பாடுகள் அகற்றப்பட வேண்டுமென இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாண சபைகள் இணைந்து தனி மாகாணசபையாக இயங்கமுடியும் என்ற ஏற்பாடு நீக்கப்படல் வேண்டும். மாகாண சபை அதிகாரத்தின் கீழுள்ள பொதுபட்டியலில் உள்ள விடயங்களை திருத்துவதற்கு சகல மாகாண சபைகளிலும் அங்கீகரிக்கவேண்டும் என்பது நீக்கப்படல் வேண்டும் என்பனவே அகற்றப்பட தீர்மானிக்கப்பட்ட விடயங்களாகும்.   யுவெறழசவநn றுநவைநசடநவைநn

வட மாகாணசபைத் தேர்தலுக்கு ஆசிய கண்காணிப்பாளர்கள்-

வட மாகாணசபைத் தேர்தலில் ஆசிய கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 10ஆசிய கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பெவ்ரல் அமைப்பின் சுமார் 1000 கண்காணிப்பாளர்கள் வட மாகாணசபைத் தேர்தலில் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 2012ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வட மாகாணத்தில் ஒரு இலட்சம் வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்களுக்கு இரு வாரங்களில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுக்க நடமாடும் சேவைகைளை நடத்திவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய கொள்கை குறித்து பாரதீய ஜனதா கட்சி விமர்சனம்-sri &india

இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையை பாரதீய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. இந்தியாவின் பலவீனமான கொள்கையே, இலங்கையுடனான உறவை பலவீனப்படுத்தியிருப்பதாக, பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜஸ்வன் சின்ஹா தெரிவித்துள்ளார். புலிகளை எதிர்ப்பதற்காக இந்திய அமைதி காக்கும் படையினரை அனுப்பியிருந்தமை, இலங்கை விடயத்தில் இந்தியா சந்தித்த பாதகமான அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு மற்றும் அடையாளத்துக்கான அச்சுறுத்தல் என்ற தொனிபொருளில் இடம்பெற்ற ஆய்வுக் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழினி பிணையில் விடுதலை-thailini

புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு முன்னாள் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி சுப்ரமணியம் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி உதயநகர் தங்கபுரத்தைச் சேர்ந்த தமிழினி இறுதிக்கட்ட யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்தபின் 2009ம் ஆண்டு மேமாதம் 27ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவரைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்த சட்டமா அதிபர் பரிந்துரைத்தார். பின்னர் வவுனியா பூந்தோட்டம் முகாமில் 2012ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி அவருக்கான புனர்வாழ்வு ஆரம்பமானது. இந்நிலையில் இன்று தமிழினி விடுதலை செய்யப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்-

பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஜெனரல் அஸ்பாக் பர்வேஷ் கயானி மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இவ்வார இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளார். இந்த விஜயத்தின்போது, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட பல பாதுகாப்பு உயர் அதிகாரிகளை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதேவேளை, பதுளையிலுள்ள தியதலாவ இராணுவ முகாமில் இடம்பெறும் நிகழ்வொன்றிலும் பாகிஸ்தான் இராணுவத்தளபதி அஸ்பாக் பர்வேஷ் கயானி கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

13ஆவது திருத்தச்சட்டம் மாற்றப்பட்டே ஆகவேண்டும்-அரசாங்கம்-

அரசியலமைப்பின் 13ஆவது  திருத்தச்சட்டம் மாற்றியமைக்கப்பட்டே ஆகவேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமாகிய கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் மற்றும் மாகாணங்களை இணைத்தல் போன்ற விடயங்கள் உள்ளிட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள உறுப்புரைகள் மீதான பொது விவாதமொன்று தற்போது இடம்பெற்றுவருகிறது. இது மாற்றப்பட்டே ஆகவேண்டும். அதிலுள்ள சில உறுப்புரைகள் மாறியே தீரவேண்டும். அரசியலமைப்பில் மாற்றம் எதனையும் மேற்கொள்ள தனக்கு உரிமையெதுவும் கிடையாதென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உணர்ந்து கொண்டதன் விளைவாலேயே 13ஆவது திருத்தச்சட்டத்தில் சில மாற்றங்களை முன்மொழிவதற்கென பாராளுமன்றத்திற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு-

வானியல் நீள்வட்டப்பாதையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 6 கோள்களில் 3 கோள்கள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை கொண்டதாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு நீரும் போதிய அளவு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 3 கோள்களும் பூமியைவிட அளவில் பெரியதாகவும், நெப்டியூனை விட சிறியதாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பகுதியில் 3 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்முறை என வாஷிங்டன் வின்வெளி ஆய்வுமைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாசையூர் இறங்குதுறை திறப்புவிழா, அரசாங்கம் புறக்கணிப்பு-

யாழ். பாசையூர் இறங்குதுறை திறப்பு விழாவில் அரசாங்கம் சார்பாக எவருமே கலந்துகொள்ளவில்லை. இந்த இறங்குதுறை திறப்பு விழாவினை யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், அமைச்சர்களான ராஜித சேனாரட்ன மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அமைச்சர்கள் இருவர், வட மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட செயலர் உட்பட அரச அதிகாரிகள் எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மோடி இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்று இறங்குதுறையினை திறந்துவைத்துள்ளார். எவ்வாறாயினும் ஐ.ஓ.எம் நிறைவேற்றுப் பணிப்பாளர் யுசுப்பே லொபியுரே, வட மாகாண ஆளுனரின் செயலர் இ.இளங்கோவன், யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளன தலைவர் எமிலியாம்பிள்ளை உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் உணர்விழந்துள்ளனர்-அம்னஸ்டி அமைப்பு-sri jail

இலங்கையின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமக்கு என்ன நடக்கிறது என்ற உணர்வை இழந்த நிலையிலேயே பெரிதும் காணப்படுவதாக அவர்கள் தெரிவிப்பதாக அம்னஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நாவின் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அம்னஸ்டி அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி இலங்கையில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தமக்கு என்ன நடந்தது என்பதை இன்னமும் நம்பமுடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சிறிய குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்காகக் கூட இலங்கைப் பொலீசார் மிளகாய்த் தூளை பிறப்பு உறுப்பில் வீசி சித்திரவதை செய்து விசாரணை நடத்தியுள்ளதாக ஊடகத்தில் வெளியான தகவலையும் அம்னஸ்டி அமைப்பு தனது அறிக்கையில் சேர்த்து அதனையும் சுட்டிக்காட்டியுள்ளது.

 இலங்கையர்கள் நாடு திரும்புவது அதிகரிப்பு-srilanka flag

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவது அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 350 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தமிழகத்திலுள்ள ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ஜனவரிமுதல் இதுவரை 1600பேர் இலங்கை திரும்பியுள்ளதாக  யூ.என்.எச்.சீ.ஆரின் தரவுகள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பியவர்களுக்கு பாதுகாப்புத் தொடர்பான அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. நாடு திரும்ப விரும்புபவர்கள் வசிக்கவுள்ள பகுதி பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே, அவர்களை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் திருப்பி அனுப்பி வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மட்டு. வர்த்தகர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு-

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக அரசியல் பிரிவுக்கான அதிகாரி மைக்கல் ஏர்வின், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு நேற்றுக்காலை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கல் ஏர்வின், வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன நடவடிக்கை தொடர்பாகவும் அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டுள்ளார். சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகர்களின் நிலை மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் அவருக்குத் எடுத்து விளக்கப்பட்டதாக மட்டக்களப்பு  மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன நிறைவேற்று அதிகாரி எஸ்.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

கைதிகளின் குடும்பங்களுக்கு நலன்புரி திட்டம்-

சிறையில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு நலன்புரி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த சமூகசேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறைவாசம் அனுபவிப்போரின் குடும்பங்களின் நலன்புரிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஊடாக விடப்பட்டு வேண்டுகோளின் அடிப்படையில் சமூக சேவைகள் அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது சம்பந்தமான அறிவித்தலை சமூக சேவைகள் அமைச்சின் செயலர் திருமதி இமெல்டா சுகுமார் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் அனுப்பி சமூகசேவை அலுவலர்கள் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குடும்பத் தலைவர் சிறைவாசப்பட்டு தண்டனை அனுபவிக்கின்ற குடும்பங்களின் ஏனைய அங்கத்தவர்கள் சமூக பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதன் காரணமாக தவறான பாதையில் ஏனையவர்களும் செல்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதனை கருத்திற்கொண்டு இத்தகைய சிறைவாசம் அனுபவிப்பவர்களின் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் பிழையான பாதையில் செல்வதை தடுக்கும் வகையிலும் அவர்களை தேசிய அபிவிருத்தியின் பங்காளர்களாக மாற்றும் வகையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சிறைவாசம் அனுபவிப்பவர்களின் வறுமையை போக்கவும் குடும்ப வருமானத்தை உயர்த்தும் வகையிலும் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கென சமூக சேவைகள் அமைச்சு நிதி உதவி உட்பட தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

News

Posted by plotenewseditor on 25 June 2013
Posted in செய்திகள் 

13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ, திருத்தங்களை மேற்கொள்ளவோ இடமளிப்பதில்லை-இடதுசாரி தலைவர்கள்- JR Rajiv

13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ திருத்தங்கள் மேற்கொள்வதற்கோ மாகாணசபை முறைமையை இல்லாதொழிப்பதற்கோ இடமளிக்கப்போவதில்லை. அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதுமில்லை என அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டொக்டர் ராஜித சேனரத்ன, டியூ.குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர ஆகியோர் நேற்று கூட்டாக தெரிவித்துள்ளனர். இலங்கையை பாதுகாக்க சீனா ஒருபோதும் முன்வரமாட்டாது என்பதை சிங்கள அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மாகாண சபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசுக்கூடாக ஐக்கிய இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் நேற்று கொழும்பிலுள்ள சமசமாஜக்கட்சி அலுவலத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்விடயத்தை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இங்கு உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர, 13ஆவது திருத்தம் மக்கள் ஆதரவுடன் கொண்டுவரப்படவில்லை. எனவே, அதனை ஒழிக்கவேண்டுமென அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச உட்பட சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அரசியல் அமைப்பில் 18 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், இத்திருத்தங்கள் எதற்கும் மக்கள் ஆதரவு பெறப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவே பெறப்பட்டுள்ளன. 26 வருடங்களுக்கு பின் வட மாகாணசபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதனை எதிர்ப்பது தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுவதை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுவதாக அமையும் என்று கூறியுள்ளார். இங்கு உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, மாகாண சபை முறைமையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அதற்காக 13ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்திருத்தம் கொண்டுவந்த பின்னர் புலிகளை தவிர ஏனைய அனைத்து ஆயுத அமைப்புகளும் ஜனநாயக அரசியலில் இணைந்தன. எனவே, 13ஆவது திருத்தத்தை பலப்படுத்தி வடமாகாண தேர்தலை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். இங்கு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, 13ஆவது திருத்தச் சட்டம் வடபகுதி மக்களுக்கு வழங்கிய உணவாகும். ஆனால், அதனை பறித்தெடுத்து தென் மாகாணத்தில் 16 வருடங்களாக அனுபவித்து வந்தனர். இன்று வட மாகாண தமிழ் மக்களுக்கு உரித்தான 13ஆவது திருத்தச்சட்டம் வழங்கப்பட தீர்மானித்திருப்பதை எதிர்ப்பது எவ்விதத்தில் நியாயமாகும்? இத்திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களாக ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13ஆவது அரசியலமைப்பை பலவீனப்படுத்தும் முயற்சியை ஏற்க மாட்டோம்-சி.சந்திரகாந்தன்- pillayan

13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை ஏற்று அதனை முதன்முதலில் கிழக்கில் நிர்வகித்தவன் என்ற அடிப்படையிலும் அதேவேளை அதனை பல வகைகளிலும் பல முறைகளிலும் வலுப்படுத்திய ஓர் சிறுபான்மைக் கட்சியை நெறிப்படுத்துபவன் என்ற அடிப்படையிலும் என்னால்; 13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும்; ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அரசுடன் ஓர் பங்காளிக் கட்சியாக நாம் இணைந்திருந்தாலும் எமது மக்களின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்துகின்ற எந்த செயற்பாட்டையும் நாம் ஏற்கமாட்டோம். மாறாக இந்த சமாதான காலத்தில் எமது மக்களின் அரசியல் அதிகாரங்களையும் அவர்களது அரசியல் அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க நாம் இதனோடு ஒருமித்த கருத்துடையவர்களுடன் இணைந்து செயலாற்ற என்றும் தயாராகவே உள்ளோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்தோர் மாத்திரமே வாக்காளர்களாக பதிவுசெய்ய முடியும்-தேர்தல்கள் ஆணையாளர்- election box

வாக்காளர்களை பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டத்தின்படி, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மாத்திரமே தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ளலாம் எனவும், அகதிகள் மற்றும் அரசியல் அந்தஸ்து கோரியிருப்பவர்களை வாக்காளர்களாக பதிவு செய்யமுடியாது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டிற்காக வடக்கு கிழக்கு மாகாணங்கள் சார்பாக குறைநிரப்பு வாக்காளர் இடாப்பொன்றை தயாரிப்பதற்கான விண்ணப்பப்படிவங்கள் கடந்த 22ஆம் திகதி கிராமசேவகர்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், ஜுன் மாதம் 28ம் திகதி அது பொறுப்பேற்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தல் இடாப்பில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டுமாயின் அவர்கள் இலங்கைப் பிரஜையாக இருக்கவேண்டும். வெளிநாடுகளில் தங்கியிருப்போர் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள முடியாது. வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து மீண்டும் நாடு திரும்பியவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இந்த திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவர். நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகள், அரசியல் தஞ்சம் கோரியிருப்போர் இதன் ஊடாக பதியப்படமாட்டார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.

நீதிமன்றில் ஆஜராகுமாறு வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு உத்தரவு-law help

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலே பிரியதர்சினியை எதிர்வரும் ஜுலை மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சாட்சியத்தை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வர்த்தகர் ஒருவரை கடத்தி கொலைசெய்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் ஜுலை 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் பிறப்பித்துள்ளார். முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தார் சிறையிலிருந்து அவரை அழைத்துவந்த சிறைச்சாலை பஸ்சிற்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன், நீதிமன்றத்திற்கு வருகைதந்த சகலரும் கடும் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈ..பி.டி.பி காரைநகர் அலுவலகம்மீது தாக்குதல்-

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) காரைநகர் அலுவலகம்மீது நேற்றிரவு 9மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.

தென்னாபிரிக்க பிரதியமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு-

இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னாபிரிக்க பிரதியமைச்சர் இப்றாகிம் இப்றாகிமை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றியும், குறிப்பாக 13ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பிலும் கூட்டமைப்பினர், தென் ஆபிரிக்க குழுவிற்கு எடுத்துக் கூறியுள்ளனர்.

தமிழ்கத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட ஆட்கடத்தல்காரர்கள் கைது-

ஆட்கடத்தலில் ஈடுபட முயற்சித்த 2 இலங்கையர் உள்ளிட்ட 4பேர் தமிழகம் நாகப்பட்டினம் பகுதியில் வைத்து நேற்று தமிழகத்தின் கியூபிரிவு பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளர். தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை அஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்புபவர்கள் குறித்து பொலீசார் கடுமையாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஆட்கடத்தலில் ஈடுபட முற்பட்ட வேளையில் 2 இலங்கையர்கள் உள்ளிடட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான இவர்கள் நீதிமன்றில் முன்னிலை ஆஜர்செய்யப்பட்டபோது இவர்களை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

வடபகுதி மக்கள் நாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை-அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்-

வடக்கில் வாழும் மக்களுக்கு நாட்டிலிருந்து வெளியேறி செல்வதற்கான தேவையில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அவுஸ்ரேலிய வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஏனைய பகுதிகளைவிட, வடபகுதியின் அபிவிருத்திக்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் யுத்ததால் தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களது ஆதரவாளர்கள் சர்வதேச ரீதியில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ளோர் நாடு திரும்பினால் அவர்களின் பாதுகாப்புக்கு நிச்சயம் உறுதியளிக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

 மனித உரிமைகள் சட்டத்தில் திருத்தங்கள்; மேற்கொள்வதில் கவனம்-Human

மனித உரிமைகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பான சிவில் அமைப்புக்களிடம் யோசனை மற்றும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார். அண்மையில் சிவில் அமைப்புக்கள் சிலவற்றுடன் இதுபற்றி கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு எதிர்காலத்தில் விதிமுறைகளை தயாரிக்கவுள்ளதாகவும் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

News

Posted by plotenewseditor on 24 June 2013
Posted in செய்திகள் 

நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை கவலைக்கிடம்-

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜேகப் ஸூமா தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் மாத்திரம் மூன்றாவது தடவையாக வைத்தியசாலையில் நெல்சன் மண்டேலா அனுமதிக்கப்பட்டுள்ளார். 94வயதான நெல்சன் மண்டேலாவின் தற்போதைய நிலை பெரும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சிறுவனை காணவில்லையென முறைப்பாடு-

யாழ். புத்தூர் பகுதியில் 15 வயது சிறுவன்  காணாமற் போயுள்ளதாக அச்சுவேலி பொலீஸ் நிலையத்தில் அச்சிறுவனின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார். தனது மகன் காணாமல் போனமை தொடர்பில் தம்மிடம் நேற்றுமாலை சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளதாக அச்சுவேலி பொலீசார் இன்று தெரிவித்துள்ளனர். புத்தூர் மேற்கைச் சேர்ந்த கவிதாசன் ரிஷாந்தன் என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார். இவர் கடந்த 19ஆம் திகதி வெளியே செல்வதாகக் கூறிச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என சிறுவனின் தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய பிரதி பொலீஸ் மாஅதிபர் நியமனம்-

உடன் அமுலுக்கு வரும்வகையில் கொழும்பு வடக்குக்கான புதிய பிரதி பொலீஸ் மாஅதிபர் ஒருவர்; நியமிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன்படி திருகோணமலை பிரதேசத்திற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த பிரதி பொலீஸ் மாஅதிபர் எல்.ஜீ.குலரட்ன நேற்றுமுதல் கொழும்பு வடக்கு பிரதி பொலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி பொலீஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, பம்பலபிட்டியவில் வர்த்தகர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவரை பதவி நீக்குவதற்கு பொலீஸ் மாஅதிபர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவூதியில் உள்ளோர்க்கு வீசா பெற கால அவகாசம்-

சவூதி அரேபியாவில் விசா அனுமதியின்றி தங்கியிருக்கும் 15 லட்சம் வெளிநாட்டவர்கள் விசா பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. சவூதியில் விசா இல்லாது வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை 03ஆம் திகதிவரை விசா பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வீசா அனுமதியின்றி சவூதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு, நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைத் தொடர்ந்து 13 ஆயிரம் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சவூதியிலுள்ள இலங்கைப் பிரஜைகள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதுவராலயத்தில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர் கொல்லப்பட்டமை தொடர்பில் நியூசிலாந்தில் அணிவகுப்பு-

இலங்கையர் ஒருவர் கொலை தொடர்பில் நியூசிலாந்து நாட்டவர்கள் இருவர் கென்டிபெரி நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 28 வயதான சமீர சந்திரசேன என்ற இலங்கையர், கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி, ஒக்ஸ்போர்டடில் உள்ள அவரது வர்த்தக நிலையத்தில் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த இலங்கையர் எரியூட்டப்படுவதற்கு முன் கடுமையாக தாக்கப்பட்டிருந்தமை பொலீஸ் விசாரணைகளின் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவ்விடயத்தினை விசாரணை செய்த பொலீசார் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்த இருவரை நேற்றையதினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியிருந்தனர்.

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முகமட் சுகிர் ரகுமான் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது முகமட் சுகிர் ரகுமான், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை ஆளுநர் செயலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் இதன்போது கேட்டறிந்து கொண்டுள்ளார். யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றங்கள் தொடர்பிலும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகருக்கு இந்த சந்திப்பின்போது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி விளக்கிக் கூறியுள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு காணி விற்பனை செய்யத் தடை-

அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனை ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி பரிசு, விற்பனை, நன்கொடை உள்ளிட்ட எவ்விதத்திலும் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியாது. இதற்கு இனி சட்டத்தில் இடமில்லை. இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்கள், குத்தகைக்கு மாத்திரமே காணிகளைப் பெற முடியும். காணி உரிமையாளர்கள், தங்களது காணிகளை குத்தகைக்கு விடுவார்களாயின் குத்தகைக்கு விடும் காலம் அதிகபட்சம் 99 ஆண்டுகள் மாத்திரமேயாகும் என ஜனாதிபதியின் யோசனையில் கூறப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் கிழமை நாட்கள் மாற்றம்-

சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தமது தொழில் வாரத்தை மாற்றியுள்ளன. இதன்படி, மாதத்தில் அனைத்து வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவின் எஸ்.பி.ஏ. செய்திச் சேவைக்கு நேற்று வழங்கிய செவ்வியில், மன்னர் அப்துல்லா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரையான காலப்பகுதி வேலைநாட்களாக கருதப்படும். வெள்ளிக்கிழமை தொழுகை நேரங்களை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தொழுகைக்காக வர்த்தக மற்றும் சேவை வழங்குநர்கள், சர்வதேச பிரதிநிதிகள் சென்று விடுகின்ற நிலையில், பாரிய பொருளாதார ஸ்தம்பிதம் ஏற்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை-மாவை சேனாதிரராஜா எம்.பி-

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை திருத்தியமைப்பது குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவியுள்ளது. 31 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆளும் கட்சி பிரதிநிதிகள் 19 பேரையும் சபாநாயகர் சமால் ராஜபக்ஷ ஏற்கனவே பெயரிட்டுள்ளார். இக் குழுவிற்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமை தாங்குகிறார். இதேவேளை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. தெரிவுக்குழுவில் இடம்பெறாவிட்டாலும் எமது கருத்துக்கள் அங்கு ஒலிக்கும்-அமைச்சர் ராஜித- பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆளும் கட்சியின் சார்பில் அனைவரும் இடம்பெற முடியாது. தெரிவுக்குழுவில் நான் இடம்பெறாவிடினும் எனது நிலைப்பாட்டையுடைய பலர் அதில் உள்ளனர். எனவே எமது கருத்துக்கள் அங்கு ஒலிக்கப்படும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான அதிகாரக் குறைப்பையும் செய்யக்கூடாது என்று வலியுறுத்திவரும் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறாமை தொடர்பில் விபரிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றுமொரு பாகிஸ்தானாக மாறுவதை விரும்பவில்லை-சுதர்சன நாச்சியப்பன்-

இலங்கை மற்றுமொரு பாகிஸ்தானாக மாற்றமடைவதை விரும்பவில்லை என இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதனையே விரும்புவதாக இநதிய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். இலங்கை படையதிகாரிகள் பயிற்சிபெற அனுமதிப்பதில் தவறில்லை. இலங்கைப் படையதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை இந்தியா நிறுத்திக் கொண்டால்;, அந்த அதிகாரிகள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இதன்மூலம் இந்தியாவின் எதிரிப்பட்டியல் நீளுமே தவிர நன்மைகள் ஏற்படாது. இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானினால் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது. மற்றுமொரு பாகிஸ்தானாக இலங்கை மாறுவதனை விரும்பவில்லை. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசாங்கம் மதிப்பளிப்பளிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோயில்களில் இரவுநேர நிகழ்ச்சிகளை தடைசெய்யத் தீர்மானம்-

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் இளைஞர்களிகிடையே வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன எனத் தெரிவித்த யாழ்.பொலீஸ் பிரிவின் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி, யாழ்.குடாநாட்டிலுள்ள இந்துக் கோயில்களில் இரவு 10மணிக்குப் பின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். யாழ். குடாநாட்டிலுள்ள இந்து ஆலயங்களில் திருவிழாக்காலங்கள் ஆரம்பித்துள்ளமையால் கோயில்களில் பாரிய குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் இறுதிநாள் நிகழ்வின்போது நடைபெறும் இசைநிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்குப் பின்னர் நடைபெறுவதால் இசைநிகழ்ச்சி முடிவடைய இரவு 12மணிக்கு மேல் ஆகிவிடுகின்றது. இதனால் இசை நிகழ்ச்சியைப் பார்க்கவரும் இளைஞர்கள் மதுபானம் அருந்திவிட்டு தகராறுகளில் ஈடுபட்டு வாள்வெட்டுச் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதனால் கோயில்களில் இரவு 10 மணிக்குப் பின்னர் இசை நிகழ்ச்சிகளை நடாத்த தடைவிதிக்கவுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News

Posted by plotenewseditor on 23 June 2013
Posted in செய்திகள் 

கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் விகாரை அமைப்பதற்கு காணியொதுக்கீடு-இந்து மக்கள் விசனம்-kanniya hot

 திருகோணமலையின் வரலாற்றுப் புகழ்பெற்ற கன்னியா வெந்நீரூற்று கிணற்றுக்கருகில் விகாரை அமைப்பதற்கு வெல்கம் ரஜமஹா விகாரையின் பிரதம குருவுக்கு ஒரு ஏக்கர் காணி அரசாங்கத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. இராவணேசன் புகழ்கொண்டதும், இந்துக்களின் புராதன இதிகாசங்களுடன் தொடர்புகொண்டதுமான கன்னியா வெந்நீரூற்றுக்கு நேரே பின்புறம் விகாரையொன்றை அமைப்பதற்கு வெல்கம் ரஜமகா விகாரையின் பிரதம குரு கேட்டுக்கொண்டதற்கு அமைய 0.4120 ஹெக்டேயர் காணியை வழங்குவதற்கு கொழும்பு காணி ஆணையாளர் நாயகம் மாகாண காணி ஆணையாளருக்கு அனுமதி வழங்கியதன்பேரில் மேற்படி காணி பௌத்த விகாரை நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த விகாரை இந்துக்கள் தமது ஈமைக்கிரியைகளைச் செய்யும் மடம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகிலும், வெந்நீரூற்றுக்கு நேரடியாக அருகிலும் அமைக்கப்படவுள்ளது. இங்கு தொன்மைமிக்க சிவன் ஆலயமொன்று இருப்பதுடன், இஸ்லாமியர்களை அடையாளப்படுத்தும் சமாதியொன்றும் இருக்கின்ற நிலையிலேயே இவ்விகாரை அமைக்கப்படவுள்ளது. தொல்பொருள் ஆய்வு என்ற காரணங்கள் காட்டப்பட்டு இவ்வாறு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இந்துக்களின் மனங்களை புண்படுத்தும் செயலென்று விசனம் தெரிவிக்கப்படுகின்றது. இவ் விகாரையை நிறுவுவதுடன், பலநூறு வருடங்களாக பாவனையிலுள்ள பாதையினை மாற்றுவதற்கும் திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது. விகாரையைத் தரிசித்த பின்பே வெந்நீர் கிணற்றில் நீராடக்கூடிய விதத்தில் இப்பாதை அமைக்கப்படவிருப்பதாகவும், இதுவரை காலமும் கிணற்றை நேரடியாக அடையக்கூடியதாக இருந்த பாதை தற்பொழுது விகாரையை முதன்மைப்படுத்தி அமைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய குடிவரவுக் கொள்கையில் மாற்றம்-

ukபிரித்தானியாவின் குடிவரவுக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் இலங்கையிலிருந்து பிரித்தானியா செல்ல 3000 ஸ்ரேலிங் பவுண்ட்களை பிணையாக வைக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் முதல் இந்த நிபந்தனை அமுலாகவுள்ளதாகவும் தெரியவருகிறது. மோசடி முறையிலான குடிவரவுகளை தடுக்கும் பொருட்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரித்தானிய உள்துறை அமைச்சர் தெரேசா மே தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் நவம்பரின் பின்னர் பிரித்தானியாவுக்கு வீசா பெற 3000 ஸ்ரேலிங் பவுண்ட்கள் முன்பிணை வைக்க வேண்டும். எனினும் இந்த பிணைத் தொகையை நாடு திரும்பியபின் மீளப் பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறாயினும் வீசா காலம் நிறைவடைந்த பின்னரும், வீசாவை பெற்றவர் பிரித்தானியாவில் தங்கியிருந்தால், அவருக்கு இந்த தொகை மீண்டும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா இந்த நடைமுறையையே பின்பற்றிவருகின்றது.

நவநீதம்பிள்ளை ஆகஸ்டில் இலங்கைக்கு விஜயம்-navneetham

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்கால்ப் பகுதியையும் நேரில் பார்வையிடவுள்ளதாக கூறப்படுகிறது. நவநீதம்பிள்ளையின் இலங்கைக்கான விஜயம் பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போதே அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் திகதிமுதல் 29ஆம் திகதிவரை அவர் இலங்கையில் தங்கியிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்கட்சிகளின் பிரமுகர்கள்,, சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் சந்திப்புக்களை மேற்கொள்வதுடன், தற்போதைய நிலைமைகளையும் ஆராயவுள்ளார். அவர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

கிழக்கு முதலமைச்சர், ஆளுநர் மாற்றம் கிடையாது-ஜனாதிபதி-

imagesCAAFRW6Nகிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரம மற்றும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோரை மாற்றுவது இல்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையில் வீணான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் விமலவீர திஸாநாயக்காவை தற்போதைக்கு மாற்ற வேண்டியநிலை தோன்றியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை நேற்றுமுன்தினம் அலரிமாளிகைக்கு அழைத்து பேசியபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண அமைச்சர்கள் ஆளுநருடன் முரண்பட்டும், ஆளும்தரப்பு உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டும் சபை அமர்வு பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டுவரும் நிலையிலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.  

முஸ்லிம் காங்கிரஸ் தெரிவுக்குழு உறுப்பினர்களை அறிவிக்க ஏற்பாடு-Hekeem

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கான தங்களின் உறுப்பினர்களை எதிர்வரும் 29ம் திகதி அறிவிப்பதாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இணைப்பாளர் சபீக் ராஜாப்தீன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்பீடம் கூடி, தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

17ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினால் தெரிவுக்குழுவிற்கு பிரதிநிதிகளை நியமிக்க முடியும்-ஐ.தே.கட்சி-unp

17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் மீண்டும் அமுல்படுத்தினால் மாத்திரமே அரசியலமைப்பு திருத்தம் குறித்த ஆராயும் தெரிவுக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகளை நியமிக்கும் என ஐ.தே.கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 17ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தி பொலீஸ் ஆணைக்குழு தேர்தல் ஆணைக்குழு போன்றவற்றை நியமிக்கும்படி நாம் அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளோம். 17ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதை அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டே வருகிறது. வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் இச்சட்டத்தை அமுல்படுத்தினால் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தும் வாய்ப்பு கிட்டும். இந்நிலையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட மேற்படி 17ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும் என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாதகலில் படகுகள் தீக்கிரையானமை தொடர்பில் ஐவர் கைது-mathakal

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் மூன்று படகுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்துபேரை பொலீசார் கைதுசெய்துள்ளனர். தீ வைக்கப்பட்ட படகுகளில் ஒன்று தீப்பற்றிய நிலையில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக இளவாலை பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் சுமார் 19 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று படகுகளும் அதிலிருந்த இயந்திரங்கள் மற்றும் வலைகளும் எரிந்து நாசமாகியுள்ளன. சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறினால் இந்த படகுகளுக்கு தீ வைக்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இளவாலை பொலீசார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கில் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் தகவல் திரட்டல்-jaffna districts

யுத்தம் இடம்பெற்றபோது வட மாகாணத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலான உரிய தகவல்களை திரட்ட தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கும் விசேட விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கவும் தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட தேர்தல் செயலகங்கள் ஊடாக இந்த விண்ணப்பப்படிவங்களை விநியோக்கவுள்ளதாக ஆர்.எம்.ஏ.எல.ரத்நாயக்க கூறியுள்ளார். 

 பொலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்-

LK policeதிக்வல்ல பிரதேச மக்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து திக்வல்ல பொலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியுடன் மேலும் 16 பொலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் மாத்தறை பொலீஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர். திக்வெல்ல, நில்வெல்ல பிரதேசத்தில் காவடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த குழுமீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல்களை பொலீஸ் அதிகாரிகளே மேற்கொண்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த இருவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று திக்வல்ல நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே பொலீஸ் அதிகாரிகள் இடம்மாற்றப்பட்டு;ளளனர்.

ஜனாதிபதி தன்சானியாவிற்கு விஜயம்- mahintha[1]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வாரம் ஆபிரிக்க நாடான தன்சானியாவுக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகச் செயலர் மொஹான் சமரநாயக தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ஒருவர் தன்சானியாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறையாகும். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்சானிய ஜனாதிபதி ஜகாயா சிக்வெரேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வடமாகாண சபை தேர்தல், சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் வேட்பாளர் தேர்வு-ipg

வடமாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்றையதினம் கொழும்பு டார்ளி வீதியிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்திருந்த சுமார் 50பேர் இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டிருந்தனர். புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரும் இத்தேர்வில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்-

jaffna studentயாழ். பல்கலைகழக முகாமைத்துவப் பிரிவு தென்னிலங்கை மாணவர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல் இடம்பெற்றுள்ளது. இன்றுபிற்பகல் 1.30 மணியளவில் யாழ். பரமேஸ்வராச் சந்தியில் இம்மோதல் இடம்பெற்றுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த 3ஆம்வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையே இம்மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவர்களின் ஆறுபேர் பொலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் இராணுவப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பில் ரி56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது-

 t 56                            மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் காவத்தைமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து ரீ- 56 ரக துப்பாக்கியுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இன்றுகாலை 05.30 மணியளவில் ஓட்டமாவடி பாலத்தடியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலீசார், பல்ஸர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை சோதனை செய்யவென சைக்கிளை நிறுத்துமாறு கூறியபோது அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளனர். அவர்களை துரத்திச்சென்ற பொலீசார் காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து கைதுசெய்து சோதனையிட்டபோது அறுகம்புல்லினால் மறைத்து வைத்து ரீ–56 ரக துப்பாக்கியை கொண்டுசென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது பேத்தாளை பாடசாலை வீதியைச் சேர்ந்த தேவமணி பாக்கியம் என்பர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவருடன் வந்த சீலன் என்பவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், இவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலீசார் தெரிவித்துள்ளனர்.

News

Posted by plotenewseditor on 22 June 2013
Posted in செய்திகள் 

 கோழி புரியாணி சாப்பிட்டு விட்டு மாட்டிறைச்சி கடை மீது தாக்குதல் இன்றைய நிலைமை இதுதான்; ரணில்
 
ranil01சிக்கன் புரியாணி சாப்பிட்டு விட்டே மாட்டிறைச்சிக் கடை மீது தாக்குதல் நடத்தும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளதாக  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.க. எம்.பி. ஜயலத் ஜயவர்த்தன மீதான அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாதென ஒரு குழுவினர் மாட்டிறைச்சிக் கடை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பௌத்த மதத்தில் உயிர்களை வதைக்க வேண்டாமெனக் கூறப்பட்டுள்ளதே தவிர மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாதெனக் கூறப்படவில்லை. இறைச்சி சாப்பிடுவதும் சாப்பிடாததும் எம்மைப் பொறுத்த விடயம்.
ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு வழமையுள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது. சிக்கன் புரியாணி சாப்பிட்டு விட்டே மாட்டிறைச்சி விற்கக் கூடாதெனக் கூறி மாட்டிறைச்சிக் கடை மீது தாக்குதல் நடத்தும் நிலையை இன்று காணக்கூடியதாகவுள்ளது.

பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்வதற்கான காரணம்chogm
  
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது, கரிசனை காட்டப்பட வேண்டிய விடயங்களில் வெளிப்படையான முன்னேற்றத்தைக்காட்டுமாறு இலங்கையை மேலும் வலியுறுத்துவதற்கான சந்தர்ப்பம் தனக்கு கிட்டுமென பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற உயர்ஸ்தானிகரைக் கேட்டுப் பாருங்கள் எனும் நிகழ்ச்சித்தொடரின்போது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டைப் பகிஷ்கரிப்பதற்குப் பதிலாக அதில் கலந்துகொள்ளப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் எதற்காக தீர்மானித்திருந்ததென்ற கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு குறித்த விடயப்பரப்புக்களில் வெளிப்படையான முன்னேற்றத்தைக் காட்டுமாறு இலங்கை அரசை மேலும் வலியுறுத்திடவும் மேற்படி மாநாடு அரிய வாய்ப்பொன்றாக அமையவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய நகரான பேர்த்தில் நடைபெற்றிருந்த முந்தைய கூட்டத்தில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதென எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் புதியதொன்றல்ல எனவும் அவர் கூறினார்.பொதுநலவாய அமைப்பில் பிரித்தானியா கொண்டுள்ள முக்கியத்துவம் காரணமாகவே மேற்படி மாநாட்டில் தான் கலந்துகொள்ளபோவதென்பதை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரன் இதற்கு முன்னர் உறுதிப்படுத்தியிருந்தார்இது குறித்து உயர்ஸ்தானிகர் ரான்கின் மேலும் தெரிவிக்கையில், பொதுநலவாய அமைப்பானது ஜனநாயகம், அபிவிருத்தி, மனித உரிமைகள், நீதி மற்றும் சட்டவாட்சி ஆகியவற்றுக்கான பகிர்ந்துகொள்ளப்பட்ட கண்ணியம் கலந்த விழுமியங்களைக் கொண்டுள்ளதொன்றாகுமெனவும், இத்தகைய விழுமியங்களை இலங்கை பேணி நடக்குமென்ற தனது எதிர்பார்ப்பை பிரித்தானிய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நுவரெலியா,சீதா-எலிய பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.A300(35)

நுவரெலியா, சீதா-எலிய பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், குறித்த பஸ்ஸில் பயணித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் உட்பட நால்வர் பலியாகியுள்ளதுடன், 87 பேர் காயமடைந்துள்ளனர். பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு சுற்றுலா வந்த தனியார் பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது

தென்னாபிரிக்க பிரதி அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இவர் திங்கட்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரை சந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்திற்கு மத்தியஸ்தம் வகிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும், மத்தியஸ்தம் வகிக்கவும் தென்னாபிரிக்கா விருப்பம் தெரிவித்திருந்தது. அத்துடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட அரச தரப்பினரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் தென்னாபிரிக்க பிரதிநிதிகள் முன்னரும் சந்தித்துப் பேசியிருந்தனர்.

வடக்கு, கிழக்கில் 25ஆயிரம் வீடுகளை அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை-

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 25000 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் சாவேஜ் இந்த உறுதிமொழியை பிரதமர் டி.எம். ஜயரட்னவை சந்தித்தபோது வழங்கியுள்ளார். அடுத்த ஆண்டில் இந்த வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இலங்கையின் அபிவிருத்திக்கு முழுமையான அளவில் உதவிகள் வழங்கப்படும் எனவும் பேர்னாட் சாவேஜ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் சமவுரிமையோடு வாழ நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்-

இலங்கையில் தமிழ்மக்கள் சுயமரியாதையுடனும், நீதி மற்றும் சமவுரிமை வழங்கப்பட்டவர்களாகவும் வாழ்வதற்கு இந்தியா வினைத்திறனான ராஜதந்திரி என்ற கதாப்பாத்திரத்தை வகிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ பிரிவு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வலியுறுத்திய கடிதம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் யெசூரியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில், இந்திய – இலங்கை உடன்படிக்கையில் கீழான 13ம் திருத்தச் சட்டத்தின்கீழ், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுகள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அச்சுறுத்தலால் வெளிநாடுகளில் தலைமறைவான ஊடகவியலாளர்கள்-

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் 2013 மே மாதத்திற்குமிடைப்பட்ட காலப்பகுதியில் 20க்கு மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்கள் தலைமறைவாகி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் மூவர் நாடு திரும்பியுள்ளதாகவும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதத்திற்கும் இந்த வருடம் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நாடு திரும்பியுள்ள மூவர் உள்ளிட்ட 26 ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்தனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைதுறைப் பணிசார்ந்த படுகொலைகள் குறைந்துள்ள போதிலும் உலகிலேயே கொலைக்குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுதல் குறித்த படுமோசமான பதிவுகளில் ஒன்றாக கடந்த தசாப்தத்திற்கு மேலாக விசாரணைக்கு எடுக்கப்படாத ஒன்பது ஊடகவியலாளர்களின் கொலைகள் விளங்குகின்றன என ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து ஜோன் ராங்கின் விளக்கம்- இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின்போது, கரிசனை காட்டப்பட வேண்டிய விடயங்களில் வெளிப்படையான முன்னேற்றத்தைக் காட்டுமாறு இலங்கையை மேலும் வலியுறுத்தும் சந்தர்ப்பம் தமக்கு கிட்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற உயர்ஸ்தானிகரைக் கேட்டுப்பாருங்கள் நிகழ்ச்சியின்போது பொதுநலவாய மாநாட்டைப் பகிஷ்கரிப்பதற்குப் பதிலாக அதில் பங்கேற்கப் போவதாக பிரித்தானியா எதற்காக தீர்மானித்தது என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கின் இதனைக் கூறியுள்ளார். மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் வெளிப்படையான முன்னேற்றத்தைக் காட்டுமாறு இலங்கை அரசை மேலும் வலியுறுத்திடவும் மேற்படி மாநாடு அரிய வாய்ப்பொன்றாக அமையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள்மீதான வன்முறை அதிகரித்த நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்-

பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை அதிகரித்துள்ள ஏழு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 37 வீதமான பெண்கள் தமது கணவரால் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மியன்மார், கிழக்கு திமோர், இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இந்நிலைமை அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது உலகளாவிய ரீதியில் தொற்றுநோயை போன்று பரவிவருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் மைதான சம்பவம் குறித்து அறிக்கை கோரல்-

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இங்கிலாந்தின் கார்டிப் மைதானத்தில் இடம்பெற்ற வெற்றிக் கிண்ண அறையிறுதி போட்டியின்போது, புலிக் கொடியுடன் சிலர் மைதானத்தினுள் பிரவேசித்திருந்தனர். இது குறித்து இலங்கையரசு பிரித்தானியாவிடமிருந்து அறிக்கை கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் ஊடாக இவ் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச் சம்பவத்தின்மூலம், இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கான பாதுகாப்பை உரிய வகையில் வழங்கவில்லை என உறுதியாகியிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார்.

நெடுந்தீவில் 40அடி மனிதனின் பாதச்சுவடு-

யாழ்., நெடுந்தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 40அடி மனிதனின் பாதச்சுவட்டைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் உ;ட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்துள்ளனர். இந்த பாதச்சுவடு உருவாகியமைக்கு விஞ்ஞான ரீதியிலும், வரலாற்று ரீதியிலும் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுவதாக நெடுந்தீவு பிரதேச செயலர் ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார். பாறைகள் சிதைவடைந்து இந்த சுவடு உருவானதாகவும், 40அடி மனிதன் காலை வைத்ததால் உருவானதாகவும், இராமாயணப் போர் நடைபெற்றபோது அனுமான் மலையைத் தூக்கிக்கொண்டு வரும்போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாகவும் பிரதேச செயலர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்-

கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடற்பரப்பில் நிலவும் காலநிலை மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய நீண்டநாள் மீன்பிடி படகுகள் மற்றும் சிறு மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இதேவேளை, மன்னாரிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பிலும், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையான கடற்பரப்பிலும் இன்று கொந்தளிப்பு ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இக் கடற்பகுதிகளில் மீன்பிடி, கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

18 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு-

கொழும்பு பத்தரமுல்ல, மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளில் தங்கியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வீடுகளில் தங்கியிருந்தபோது 2001ஆம் அண்டு முதல் வாடகை செலுத்தவில்லையென மேற்படி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நுகேகொடை மாவட்ட நீதிபதி நாமல் பலல்லவின, இவர்களை எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளார்.