மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு கிடையாது’ -அமைச்சரவை
இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயும்.இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழமை, ஜூன் 18ஆம் திகதி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அரசாங்கம் முன்வைக்கும்.இலங்கை அரசின் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாரந்தரச் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவர்கள் இதனை அறிவித்துள்ளார்.எதிர்காலத்தில் வரக்கூடிய ஜனாதிபதிகள் கூட தமிழர்களின் தாயகமாக கொள்ளப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்புக்களை அமைச்சரவையின் இந்த தீர்மானம் இல்லாமல் செய்வதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
கவிஞர் வாலி மருத்துவமனையில்
82 வயதான பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலிக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வாலி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள வாலி , எம். ஜி. ஆர். , சிவாஜி முதல் தொடங்கி இன்றைய தலைமுறையினர் வரை தொடர்ந்து சினிமாப் பாடல்கள் எழுதி வருகிறார். சிறந்த எழுத்தாளருமான வாலி திரைப்படங்களிலும் நடத்துள்ளார்.
பிரபாகரன் மதிவதனிக்கு அரச நியமனம்? .
யாழில் இன்று நடைபெற்ற வடமாகாணசபைத் திணைக்களங்களில் தொண்டர்களாக கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரபாகரன் மதிவதனி என்ற பெயருடைய ஒருவருக்கு நியமனம் வழங்கப்பட்டது.
குறித்த நபரை அழைத்தபோது அவரின் நியமனக் கடிதத்தில் உள்ள பெயரை அவதானித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதத்தில் உள்ள பெயரை பார்க்குமாறு ஆளுநரிடம் காட்டினார்.
குறித்த பெயரைப் பார்த்த ஆளுநர் மற்றும் யாழ். மேயர் யோகேஸ்வரி மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் தங்களுக்குள் சிரித்ததை அவதானிக்கக் கூடியாதாக இருந்தது