இலங்கையின் சிறுபான்மை இனங்கள் மீது இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் பொதுபல சேனா அமைப்பு தாக்குதல் நடத்தும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுபல சேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், ஜுலை மாதத்தில் வரும் எசல போயாவிற்கு முன்பாக இந்நாட்டில் இயங்கும் சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாது போனால் நாங்கள் இந்நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர் என்ற ரீதியில் சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் இனிவரும் காலங்களில் சிங்களக் கிராமங்களுக்குள் நுழையும் அந்நிய இனத்தவர்களை அடித்து விரட்டும் நோக்கில் பௌத்த பாதுகாப்பு குழுவொன்றை அனைத்து சிங்களக் கிராமங்களிலும் உருவாக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.