dead.bodyமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நல்லதண்ணிதொடுவா பிரதேசத்திலுள்ள களப்புப் பகுதியொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை நேற்றையதினம் மீட்டுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் மதுரங்குளி சமீரகம கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் முஹம்மது மன்சூர் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடந்த ஒன்றரை மாதங்களாக முல்லைத்தீவில் தங்கியிருந்து கடற்தொழில் செய்துவருவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த களப்பு பிரதேசத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக சடலத்தை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.