வெளிநாட்டு கண்காணிப்பு குழுக்களை ஈடுபடுத்துவது குறித்து ஆலோசனை-

எதிர்வரும் வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலின்போது மூன்று வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்களை ஈடுபடுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகிறது. இது தொடர்பில் நேற்றைய தினம் தேர்தல்கள் செயலகத்தில் கலந்துரையாடப்பட்டதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகள் வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது சர்வதேச கண்காணிப்பு குழு நியமிக்கப்பட வேண்டும் என்று கோரி இருந்தன. அத்துடன் .தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலின்போது இராணுவத்தினரின் பிரச்சன்னத்தை குறைத்து பொலீசாரை பணியில் ஈடுபடுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அவதானம் மிக்க நாடு – பிரித்தானியா

இலங்கையை பொறுத்தவரை அந்த நாடு பிரித்தானியாவின் அவதானம் மிக்க நாடுகளில் பட்டியலிடப்பட்டுள்ளது எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் தாம் பங்கேற்பது சரியான தீர்மானமே என பிரித்தானிய பிரதமர் டேவிட்ட கெமரோன் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம் இலங்கையின் உண்மையான நிலவரங்களை சர்வதேசத்துக்கு அறிவிக்க முடியும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் கூறியுள்ளார்.

இரு தமிழ் கட்சிகள் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டி-

வட மாகாண சபைத்தேர்தலில் தமிழ் கட்சிகள் இரண்டு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சிறி ரெலோ ஆகிய இரண்டு கட்சிகளே இவ்வாறு போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்த அவர் இடதுசாரி கட்சிகள் சிலவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் தயா மாஸ்டர் மட்டுமே போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரா. சம்பந்தன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு-

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமிடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது வடமாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்படாத விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கண்ணிவெடியகற்ற 94 சதுர கிலோமீற்றரே மீதம்-

வடக்கில் இன்னும் 94 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தில் மாத்திரமே நிலக்கண்ணிவெடி அகற்ற வேண்டியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. சர்வதேச தரங்களுக்கு அமைய நிலக்கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கை 2002 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். இதன்போது 2064 சதுர கிலோமீற்றர் பகுதி நிலலக்கண்ணிவெடி அபாயம் நிலவும் பிரதேசமாக இனங்காணப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் யுத்தம் நிறைவுபெற்றதன் பின்னர் நிலக்கண்ணிவெடி அபாயம் நிலவும் பிரதேசமாக 505 சதுரகிலோமீற்றர் பிரதேசம் இனங்காணப்பட்டிருந்தது. குறித்த நிலப்பரப்பில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் படிப்படியாக நிறைவு செய்யப்பட்டு தற்போது 94 சதுர கிலோமீற்றர் பிரதேசத்திலேயே நிலக்கண்ணிவெடி அகற்ற வேண்டியுள்ளதாக இராணுவ பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டயுள்ளார்.

மாகாண சபை தேர்தல்களுக்காக 1500 கோடி செலவு-

எதிர்வரும் வடக்குஇ மத்திய மற்றும் வட மேல் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில்இ தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியஇ பல தரப்பினருடன் நேற்று கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார். இந்த கலந்துரையாடல் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணையாளர் செயலகத்தில் இடம்பெற்றது இதன்போதுஇ கட்சியின் பொதுச் செயலாளர்கள்இ தேர்தல் கண்காணிப்பாளர்கள்இ பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோருடன் தேர்தல்கள் ஆணையாளர் கலந்துரையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தேர்தலகள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியஇ மாகாண சபை தேர்தல்களின் பொருட்டு 1500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆஸி. சென்ற படகு கவிழ்ந்து குழந்தை பலி:

88பேர் மீட்பு- புகலிடக் கோரிக்கையாளர்களைச் ஏற்றிச் சென்ற படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேசன் கிளயார் தெரிவித்துள்ளார். குறித்த படகிலிருந்து 88 பேர் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த படகில் உள்ளவர்கள் நேற்றே தமக்கு ஆபத்து என உதவி கோரியதாகவும் அதன்படி அவர்களை பாதுகாக்கச் சென்ற அதிகாரிகள் இன்று காலையே அங்கு சென்றதாகவும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைஇ ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த படகில் இருந்திருக்கலாம் என அவர் சந்தேம் வெளியிட்டுள்ளார். காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணியில் கடற்படை கப்பல்களும் விமானங்களும் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளத்தில் தமிழ் வர்த்தகர் கடத்தல்-

சிவப்பு நிற காரில் வந்த சிலர் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உடப்புஇ ஆனமடு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய சொக்கலிங்கம் சேதுராமன் என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்தல் இடம்பெற்ற போது அதனை நேரில் கண்ட நபர் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். யாரால் எதற்காக இக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டது என இன்னும் தெரியவரவில்லை. புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்