கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக சி.வி. விக்னேஸ்வரன் தெரிவு

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்றுகாலை கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே சி.வி விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்றுகாலை கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையகத்தில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது

வீரமக்கள் தின மூன்றாம் நாள் நிகழ்வுகள்-

c007தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) வருடந்தோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் கடந்த 13ம்திகதி முதல் நாளை 16ம் திகதி வரையான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. வீரமக்கள் தினத்தின் 03ம் நாளான இன்றும் வவுனியா கோவில்குளம், புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் சமாதியில் மௌன அஞ்சலியும், மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. வீரமக்கள் தின இறுதிநாளான நாளை செயலதிபர் உமாமகேஸ்வரன் சமாதி வளாகத்தில் மலராஞ்சலி, மௌனஅஞ்சலி நிகழ்வுகளுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
 

.