வீரகேசரி நாளிதழுக்கு நேற்று திங்கட்கிழமை வழங்கிய விஷேட செவ்வியிலேயே முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பின்வருமாறு கூறினார்.
காதலித்த பெண்ணை கைவிட்டு பெற்றோர்கள் பார்த்த பெண்ணை மணப்பது போல் ஒரு ஏக்கம் நிறைந்த உணர்வு வட மாகாண சபை முதலமைச்சரர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டவுடன் நான் உணர்கிறேன். எவ்வாறாயினும் எனக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பை தமிழர்களுக்காக முழு மூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை முதன்மை வேட்பாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். Read more