வவுனியாவில் இன்று நடைபெற்ற புளொட் அமைப்பின் வீர மக்கள் தின இறுதிநாள் நிகழ்வு!!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பால் வருடா வருடம் நினைவு கூறப்படும் வீர மக்கள் தினத்தை முன்னிட்டு 13.07.2013 அன்று வவுனியாவில் ஆரம்பமாகிய 24வது வீரமக்கள் தின நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்றைய தினம் புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் மரணித்த அனைத்து இயக்க தலைவர்கள்இ உறுப்பினர்கள்இ கழகத் தோழர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு வீரமக்கள் தின இறுதி நாள் ஆரம்பமாகியது.
இதில் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்இ நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயலாளர் மாவை சேனாதிராசாஇ கூட்டமைப்பின் வவுனியா முன்னாள் நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன்இ நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரெலோ இயக்க முக்கியஸ்தர்களுமான செல்வம் அடைக்கலநாதன்இ வினோ நோகதாரலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தருமான சிவசக்தி ஆனந்தன்இ புளொட் முக்கியஸ்தர்கள் ராகவன் (ஆர்ஆர்)இ சிவநேசன் (பவன்)இ ஸ்ரீஸ்கந்தராஜா (பீற்றர்)இ பத்மநாதன் (பற்றிக்)இ புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எப்) உபதலைவர்களில் ஒருவரும்இ முன்னாள் வவுனியா நகர பிதாவுமான ஜி.ரி.லிங்கநாதனின் (விசு)இ முன்னாள் வவுனியா உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்)இ வவுனியா முன்னாள் நகரசபை உறுப்பினர் குமாரகுல சிங்கம் (குமார்) செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (சிவம்)இ சுதாகரன்இ பருத்தித்துறை முன்னாள் நகரசபைத் தலைவர் வின்சண்ட் கென்னடிஇ முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன்இ தோழர் டொமினிக் அன்ரன் தோழர் சங்கர் உட்பட புளொட் முக்கியஸ்தர்கள்இ கழகத் தோழர்களுடன்..
வவுனியா குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலய பிரதம குருக்கள் கந்தசாமி ஐயாஇ வவு.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன்இ சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் சேனாதிராஜாஇ நகரசபை உறுப்பினர் செல்லத்துரைஇ கோட்டக்கல்வி அதிகாரி நடராஜா மாஸ்ரர்இ முன்னாள் அதிபர் வையாபுரிஇ முன்னாள் அதிபர் சிவசோதி மாஸ்ரர்இ முன்னாள் நகரசபை உறுப்பினர் சிவானந்தம்இ முச்சக்கர வாகன சங்கத் தலைவர் ரவி உட்பட பல முக்கியஸ்தர்களும்இ ஆதரவாளர்கள் பொதுமக்கள் என சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் ஆரம்ப நிகழ்ச்சியாக முதலில் மாலைதீவுப் புரட்சி நடவடிக்கையில் மரணித்த புளொட் தோழர் கோபியின் தாயார்இ புளொட் முக்கியஸ்தர் தோழர் ஜெஸ்மின் அவர்களின் துணைவியாரும்இ புளொட் மகளிர் அமைப்பை சேர்ந்தவருமான தோழர் ஜெயபாலினி ஜெஸ்மின்இ உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களினால் நினைவுச் சுடர் ஏற்றலுடன் கழகத் தோழர்கள்இ ஆதரவாளர்கள்இ பொதுமக்களினால் மலரஞ்சலி செலுத்தப் பட்டதுடன்இ வீர மக்கள் தின அஞ்சலி நிகழ்ச்சி ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக திரு.மகேந்திரராஜா வரவேற்புரை நிகழ்த்தியதுடன்இ தோழர்.ஜி.ரி.லிங்கநாதனினால் (விசு) தலைமையுரை நிகழ்த்தப்பட்டு புளொட் தலைவர் சித்தார்த்தன்இ உட்பட புளொட் முக்கியஸ்தர்களினாலும்இ ஏனைய அமைப்பு பிரதிநிதிகளினாலும்இ ஊர்ப் பிரமுகர்களினாலும் உரை நிகழ்த்தப்பட்டு தோழர் பவனின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவேறியுள்ளது.
இன்றைய வீரமக்கள் தின நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் ‘மரணித்த அனைத்து இயக்கப் போராளிகளையும்இ பொதுமக்களையும் நினைவு கூறும் இத்தினத்தில் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு தினத்தை ஏற்படுத்திஇ மக்களின் உரிமைப் போராட்டத்துக்காக மரணித்த அனைத்து இயக்கப் போராளிகளையும்இ பொதுமக்களையும் நினைவு கூருவதை விடுத்துஇ எல்லோரையும் நினைவுகூரும் ஓர் தினத்தை எல்லோருக்கும் பொதுவாக ஓர் தினத்தில் நடாத்த முன்வர வேண்டும்’ என்றார்.
தகவல்.. ஊடகப்பிரிவு -புளொட்