வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இராணுவம் இறங்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.       

 

TNA-Leaders_4இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆளுங்கட்சிகாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இராணுவம் இறங்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.             ஆனால் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் நியாயமற்றது என்று இராணுவப் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார். வடக்கு உட்பட மூன்று மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் வியாழக்கிழமை(25.7.13) அன்று தொடங்கின. எனினும் பிரதான கட்சியின் உறுப்பினர்கள் யாரும் முதல் நாளன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமது வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து வருவதாக கூறும் அதன் தலைவர் இரா சம்பந்தர் இன்னும் ஒரிரு நாட்களில் அவை சமர்பிக்கப்படும் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

கூட்டமைப்பிலுள்ள ஐந்து கட்சியின் தலைவர்களுடைய பூரண சம்மதத்துடன் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணின் உறுப்பினர்கள் இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட விரும்பினால், அதற்கு எவ்விதமான ஆட்சேபணையும் இருக்க முடியாது என்றும் அதற்கு பரிபூரணமான ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும் சம்பந்தர் கூறுகிறார்.

அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு விபத்துக்குள்ளானது

235F8890CBFA3BAA7E4CB2D113C75Fஇலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 3 இலங்கையர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 அகதிகளே உயிரிழந்துள்ளதோடு இதில் இரு பெண்களும் குழந்தை ஒன்றும் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர்களில் ஒரு 18 மாத ஆண் குழந்தை, 2 வயது, 7 வயதுடைய இரு பெண் குழந்தைகள் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் அடங்குகின்றனர்.

ஜாவாத் தீவு கடற்பரப்பில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற இவ் விபத்தின் போது 200க்கும் மேற்பட்டோர் வரை படகில் இருந்ததாகவும் அதில் 189 பேர் வரை காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. படகில் இருந்தோர் இலங்கை, ஈராக், ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.விபத்துக்குள்ளான படகில் இருந்த சிலர் நீந்தி கரையை வந்து சேர்ந்து வழங்கிய தகவல்களையடுத்தே மீட்பு பணிகள் தொடங்கப்பட்டதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன