மன்னாரில் வெலிக்கடைப் படுகொலை நினைவுதினம் அனுஷ்டிப்பு-
1983இல் நடைபெற்ற வெலிக்கடைப் படுகொலைகளை நினைவுகூர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தலைமையில் மன்னார் கலாச்சார மண்டபத்தில் இன்றுமாலை நினைவுக்கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், என்.சிறீகாந்தா, எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கருணாகரன்(ஜனா), பிரசன்னா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உiராற்றினார்கள், இந்நிகழ்வில் பெருந்தொகையான மக்களும் பங்கேற்றிருந்தனர்.