தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல்-
வட மாகாணசபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்றுபகல் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இன்றுபகல் 12.21அளவில் யாழ். கச்சேரியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வவுனியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முல்லைத்தீவு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் விபரங்கள்,
யாழ். மாவட்டம்-
சி.வி.விக்னேஸ்வரன் (முதன்மை வேட்பாளர்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பாஷையூர் – இ.ஆனல்ட், சாவகச்சேரி – சட்டத்தரணி ச.சயந்தன், வடமராட்சி – பொறியிலாளர் சிவயோகன், யாழ். மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், யாழ். மாநகர சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி, யாழ். மாநகர சபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம், புலிகள் அமைப்பைச் சேர்ந்த எழிலனின் மனைவி ஆனந்தி, தமிழரசுக் கட்சி இளைஞர் அணி யாழ். மாவட்டத் தலைவர் பா.கஜதீபன், காரைநகர் – தம்பிராசா, கரவெட்டி – தர்மலிங்கம், வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம், வர்த்தக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம், சுரேஷ் பிரேமசந்திரன் (பா.உ)அவர்களின் சகோதரர் சர்வேஸ்வரன், சூழலியாலாளர் பொ.ஐங்கரநேசன், வட்டுக்கோட்டை- குகதாசன், வடமராட்சி- ச.சுகிர்தன்
வவுனியா மாவட்டம்
எம்.எம்.ரதன், செந்தில்நாதன் மயூரன், எஸ்.தியாகராஜா, எம்.பி.நடராஜா, எஸ்.ரவி, ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி), க..சந்திரகுலசிங்கம (மோகன்), ஆர்.இந்திரராஜா, வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம், மன்னார் மாவட்டம், அந்தோணி சூசைரட்ணம், சிறிமோ சாய்வா, சு.சிவகரன், ஞானசீலன் குணசீலன், இருதயநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன், திரிசோத்திரம் நிமலசேகரம், ஜோசப் ஆனந்த குரூஸ், பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன், அய்யும் அஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டம்-
ரி.ரவிகரன் எம்.அன்ரனி ஜெயநாதன், கந்தையா சிவநேசன் (பவன்), ஜு.கனகசுந்தரசுவாமி, வைத்தியர் சிவமோகன், கமலேஸ்வரன், திருமதி குணசீலன் மேரிகமலா, உடையார் கட்டு ஆண்டிஐயா புவனேஸ்வரன்
கிளிநொச்சி மாவட்டம்-
வீ.ஆனந்தசங்கரி,
ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர்கள் தம்பிராசா குருகுலராஜா, பசுபதி அரியரத்தினம், சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை, திருலோகமூர்த்தி, பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம், திருமதி மினுபானந்தகுமாரி கேதுரட்ணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பு-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று நண்பகல் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றினை நடத்தியுள்ளனர். தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் காரியாலயத்தில் இன்றுபிற்பகல் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், என். சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் பங்குபற்றியிருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது வேட்பாளர்களுக்கான ஒன்றுகூடலும் அங்கு இடம்பெற்று வருகின்றது.
தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் உண்ணாவிரதம்-
யாழில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான தங்க முகுந்தன் முன்னாள் மாநகர சபை மேயர் செல்லன் கந்தையா, செல்லையா விஜிதரன் ஆகியோரே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை மறந்து எல்லோரும் ஒன்றிணைந்து இத்தேர்தலில் அப்பாவி மக்களை மட்டும் கருத்தில் கொண்டு போட்டியிட வேண்டும். கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறக்கூடாது என வலியுறுத்தியே இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலiயில் மேற்படி உண்ணாவிரதப் பேராட்டத்தை உடன் நிறுத்த வேண்டுமென தான் அவர்களிடம் தெரிவித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.
இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான சத்தியாக்கிரகம்- இந்திய –
இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு தேசிய இயக்கங்களின் ஒன்றியம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. இன்றுமுற்பகல் 9 மணிமுதல் இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டம் காரணமாக காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் வசந்த பண்டார கருத்து வெளியிடுகையில், 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை துரிதமாக ரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோன்று இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவினால் விடுக்கப்படும் அழுத்தங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
13ஆவது திருத்ததில் மாற்றத்திற்கு இடமில்லை – இந்தியா-
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜயராமிடம் உறுதியளித்துள்ளார். இந்திய கூட்டணி அரசாங்கத்தின் மத்திய அமைச்சர் வீ.நாரயணசாமி ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அதிக தாக்கம் செலுத்தும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம், அதிகார பரவலாக்கல் மற்றும் மீளமைப்பு தொடர்பிலேயே இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழர் பிரச்சினையி;ல் இந்தியாவின் மத்தியஸ்தத்திலும் மாற்றங்கள் இடம்பெறாது என்றும் பிரதமர் கூறியுள்ளார். சேது சமுத்தி கால்வாய் திட்டம் சூழலை மாசுபடுத்தாது என்ற காரணத்தினால் அதனை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என்று வி.நாராயணசாமி ஊடகவியலாளர்களிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தங்கம் கடத்தியவர்கள் சுங்கத்தினரால் கைது-
சென்னை சுங்க அதிகாரிகள் 2.5 கிலோகிராம் தங்கக் கட்டிகளை கடத்தி வந்த 14 பேரை கைது செய்துள்ளனர். இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்திக் கொண்டு வௌ;வேறு வானூர்திகளில் பயணித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தஞ்சாவூர், திருச்சி, மற்றும் மதுரை போன்ற பகுதிகளிலிருந்து சுற்றுலா வீசாக்களில் கொழும்பு, மலேசிய, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது. தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஷிராணி பண்டாரநாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு-
2010, 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் சட்டத்திற்கமைய முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தனது சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடவில்லை என குற்றஞ்சாட்டி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 23 முறைப்பாடுகள் பதிவு-
இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 23 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் வன்முறை முறைப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆயினும் சிறிய அளவிலான வன்முறைகளே அதிகளவில் பதிவாகியுள்ளதாக அலுவலகத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார். இவற்றில் வட மாகாணத்தில் மூன்று வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் மத்திய மாகாணத்தில் 10 சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனைத் தவிர குருநாகல் மற்றும் புத்தளத்தில் முறையே 3 மற்றும் 2 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வடமேல் மாகாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் வன்முறை முறைப்பாட்டு அலுவலகத்தின் இணைப்பாளர் மேலும் கூறியுள்ளார்.
அதிகாரப் பகிர்வின்மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்;-ஜப்பானிய தூதுவர்-
நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வின் மூலமே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஜப்பான் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ளவதற்கு அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுத்து ஹோபோ தெரிவித்துள்ளார். அதன்படி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அதிகாரப் பகிர்வு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை அரசாங்கம் நல்லிணக்க முனைப்புக்களில் மேலும் ஆர்வம் காட்டும் என ஜப்பான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டம் அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, எனினும் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது