Header image alt text

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமாலை வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்);, புளொட்டின் முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், புளொட்டின் வவுனியா நகரசபை உறுப்பினர் க.பார்த்தீபன் ஆகியோரும் ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும் இக் கலந்துரையாடலை நடத்தியிருந்தனர். இதன்போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேறிய மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதுடன், இங்கு உரையாற்றிய அனைவரும், இம்முறை வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையாக வெற்றிபெற வேண்டுமென்பதையும், அதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்கச் செல்ல வேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

News

Posted by plotenewseditor on 31 August 2013
Posted in செய்திகள் 

ஐ.நா அலுவலகத்திற்கு கடும் பாதுகாப்பு-

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைத் தலைமைக் காரியாலத்திற்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதன்பிள்ளை, இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் முன்னர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளார். இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது. நவநீதன்பிள்ளையின் வாகனத் தொடரணியை வழி மறித்து மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக சில பௌத்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் உதவி-

நீண்டகால அபிவிருத்திகளின் ஊடாக நிலையான மீளமைப்பை ஏற்படுத்த முனையும் இலங்கையின் முயற்சிகளை வரவேற்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீன்பிடி சமூகத்தின் மீளமைப்பு மற்றும் உட்கட்டுமான வசதிகளுக்காக ஜப்பான் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக ஜப்பான் 37 மில்லியன் ரூபாய்களை வழங்கிவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிதியின் மூலம், முல்லைத்தீவில் புதிதாக குடியேற்றப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதார தேவைகள், குளங்களை மறுசீரமைத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்-நவநீதம்பிள்ளை-

இறுதி யுத்தம் தொடர்பில், இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன்பிள்ளை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை வந்திருந்த நவநீதன்பிள்ளை இன்று இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார். இதனையொட்டி கொழும்பில் உள்ள ஐ.நா காரியாலயத்தில் அவரது ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதில் உரையாற்றிய நவநீதன்பிள்ளை, இலங்கையின் இறுதி யுத்தம் சம்பந்தமாக உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ளார். அத்துடன் புலிகள் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இன்றைய தினமும் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக நவிபிள்ளையின் அறிக்கை பக்கச்சார்பின்றி இருக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைகள் நிறுத்தம்-

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்றுமுதல் பொதுமக்கள் மீதான சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். வவுனியா ஓமந்தை இராணுவ முகாமில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்களின் பதிவு மட்டும் இடம்பெறும். போக்குவரத்து பயணிகளை வாகனங்களில் இருந்து இறக்கி சோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறாது. வடக்கில் இருந்து தெற்குக்கும் தெற்கில் இருந்து வடக்கிற்கும் கொண்டு செல்லப்படும் பொருட்களும் சோதனை நடவடிக்கைகளுக்காக இறக்கி ஏற்றப்படாது. இதேவேளை சோதனைச் சாவடியானது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் உறுதுணையாக காணப்பட்டது. இதனூடாக தினமும் சராசரியாக 320 பேரூந்துகளும் 575 பார ஊர்திகளும் 630 சிறிய ரக வாகனங்களும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்று வந்தன. தினமும் சராசரியாக 15,377 உள்ளுர் பயணிகளும் 198 வெளிநாட:டு பயணிகளும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சொன்றுவநதனர்.  வடக்கில் இருந்து தெற்கிற்கு 254 பேரூந்துகளும் 710 பார ஊர்திகளும் 773 சிறிய ரக வாகனங்களும் வடக்கில் இருந்து தெற்கிற்கு சென்று வந்தன. தினமும் சராசரியாக 17,164 உள்ளுர் பயணிகளும் 111 வெளிநாட்டு பயணிகளும் தெற்கிற்கு செல்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பு மீது நம்பிக்கை உள்ளது-அமைச்சர் டியூ.குணசேகர-

வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியீட்டினால் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக செயற்படுவார்கள் என சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட வலுவான வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் களமிறக்கியுள்ளது. கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டி, மாகாணசபை ஆட்சியை நடத்தினால் ஏனைய மாகாணங்களிலும் முன்னுதாரணமாக திகழும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் பிரிவினைவாதக் கொள்கைகளை கைவிட்டு ஜனநாயக கொள்கைகளில் கூடுதல் ஆர்வம் காட்டும். பணத்திற்காக ஆசைப்பட்டு பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். புத்திசாதூரியமானவர்கள் அரசியலை விட்டு விலகியிருக்கின்றனர் என சிரேஸ்ட அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் நம்பகரமான விசாரணை அவசியம்-

ஐரோப்பிய ஒன்றியம்- காணாமல் போனவர்கள் தொடர்பில் வெளிப்படையானதும் நம்பகமானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயிருந்தனர். 1970 மற்றும் 1980களில் தெற்கில் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் போதும் பெருமளவிலானவர்கள் காணாமல் போயுள்ளனர் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகளை நடாத்துவதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகவுள்ளது. கடந்த கால காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துதல் எதிர்காலத்தில் இவ்வாறான காணாமல் போதல் சம்பவங்களை தடுத்தல் ஆகியன மிகவும் அவசியமானது என ஐரோப்பிய ஒன்றியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு குறித்த நவிப்பிள்ளையின் கோரிக்கை நிராகரிப்பு-

நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், வடக்கில் இராணுவத்தை திரும்பப் பெறுதல், 800 அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காவற்துறையை நீதியமைச்சின்கீழ் கொண்டுவருதல் ஆகிய கோரிக்கைகளையே அரசாங்கம் நிராகரித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. பல அரசசார்பற்ற நிறுவனங்களின் தேவைகளுக்கு அமைய அவர் இக் கோரிக்கையை முன்வைத்ததாக தெரியவந்துள்ளதாகவும் ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது,

இணுவில் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள்-

யாழ். இணுவில் பகுதியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேர்தல் கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன. இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயிலடி மற்றும் அதற்கு அண்மையிலுள்ள விளையாட்டுத் திடல் ஆகியவற்றில் மேற்படி தேர்தல் கருத்தரங்குள் இடம்பெற்றுள்ளன. இக்கருத்தரங்குகளில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உதயகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் பா. கஜதீபன் ஆகியோர் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய அனைவரும், வட மாகாணசபைத் தேர்தலின் முக்கியத்துவம் தொடர்பிலும், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டிய கடமையையும் எடுத்துக் கூறியதுடன், பெருந்தொகையான மக்கள் வாக்களித்து, தமிழ் தேசியக் கூடடமைப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார்கள். இக்கருத்தரங்குகளில் பெருந்தொகையான இளைஞர்களும், முதியவர்களும், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பெருமளவிலானோரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா கோயில்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் நேற்றையதினம் வவுனியா, கோயில்குளம், தெற்கிலுப்பைக்குளம், சமளங்குளம் மற்றும் எல்லப்பர் மருதங்குளம் ஆகிய பகுதிகளில்  இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் மேற்படி கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். கோயில்குளம் மற்றும் தெற்கிலுப்பைக்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடல்களில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் மிகவும் அக்கறையெடுத்து தமிழ்; தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்றுமாலை சமளங்குளம் மற்றும் எல்லப்பர் மருதங்குளம் பிரதேசங்களில் தேர்தல் கருத்தரங்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன் ஆதரவாளர்களும், ஊர்ப்பிரமுகர்களும் தேர்தல் குறித்த விரிவான கருத்தரங்குகளை அப்பகுதிகளில் நடத்தியிருந்தனர்.

News

Posted by plotenewseditor on 30 August 2013
Posted in செய்திகள் 

ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் நவிபிள்ளையின் சந்திப்புகள்-

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். அத்துடன், மனித உரிமைகள் தொடர்பில் செயற்படும் பெருந்தோட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்கவையும் அவர் இன்று சந்திக்கவுள்ளார். இன்றுபகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு செல்லும் அவர் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். இதன்போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேவா கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்குக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேற்றிரவு கொழும்பு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் சட்டங்களை மீறிய 40பேர் கைது-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புபட்ட 40 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம், அச்சுறுத்தல், தாக்குதலுடன் தொடர்பு போன்ற காரணங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுடன் தொடர்புடைய 71 வன்முறைச் சம்பவங்கள் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளது. அதில் குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் ஹட்டன் பகுதிகளில் இருந்தே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் சட்டங்களை மீறும் நபர்கள்மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் கைது-

காலி, அம்பலாங்கொட பகுதியிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல ஆயத்தமாக இருந்த 27 பேர் நேற்றிரவு பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொட பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 8 பேரும், பேருவளைப் பகுதியில் வீடொன்றில் தங்கிருந்த 13 பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒன்பது பேர் சிங்களவர்கள் எனவும் 14பேர் தமிழர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளார். கைதானவர்கள் 10 தமிழ் ஆண்களும், 7 சிங்கள ஆண்களும் 6 தமிழ்ப் பெண்களும், 04 தமிழ் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவித்த பொலீசார் இவர்கள் கிளிநொச்சி, திருமலை, நீர்கொழும்பு, வவுனியா, காலி மற்றும் அம்பலாங்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

அமெரிக்கத் தூதுவர், சோபித தேரர் சந்திப்பு-

அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அமைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொழும்பு கோட்டை நாக விஹாரைக்கு விஜயம் செய்த சிசன், சோபித தேரரை சந்தித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் பாதக நிலைமைகளையும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் சோபித தேரர் அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கியுள்ளார். 17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் எனவும் சோபித தேரர் அமெரிக்கத் தூதரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச வளம் முறையற்ற பாவனை குறித்து 89 முறைப்பாடுகள் பதிவு-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைளில் அரச வளங்களின்  முறையற்ற பாவனை குறித்து தேர்தல்கள் செயலகத்தில் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அரச சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் 31 முறைப்பாடுகளும், அரச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பில் 34 முறைப்பாடுகளும், அரச வளங்களை பகிர்ந்தளித்தமை தொடர்பில் 16 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் செயலகத்தின் விசேட முறைப்பாட்டுப் பிரிவு கூறியுள்ளது. அரச ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பில் 13 முறைப்பாடுகளும், தாக்குதல் தொடர்பில் 15 சம்பவங்களும், தேர்தல் வன்முறைகள் குறித்து 22 முறைப்பாடுகளும்  பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் நவிபிள்ளையின் சந்திப்புகள்-

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். அத்துடன், மனித உரிமைகள் தொடர்பில் செயற்படும் பெருந்தோட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்கவையும் அவர் இன்று சந்திக்கவுள்ளார். இன்றுபகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு செல்லும் அவர் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். இதன்போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேவா கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்குக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேற்றிரவு கொழும்பு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத ஸ்தலங்களில் மிருக பலிக்கு தடை-

மத ஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. புத்தளம் மாவட்டம் சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனு விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News

Posted by plotenewseditor on 29 August 2013
Posted in செய்திகள் 

தேர்தல் சட்டங்களை மீறிய 40பேர் கைது-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புபட்ட 40 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம், அச்சுறுத்தல், தாக்குதலுடன் தொடர்பு போன்ற காரணங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுடன் தொடர்புடைய 71 வன்முறைச் சம்பவங்கள் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளது. அதில் குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் ஹட்டன் பகுதிகளில் இருந்தே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் சட்டங்களை மீறும் நபர்கள்மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் கைது-

காலி, அம்பலாங்கொட பகுதியிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல ஆயத்தமாக இருந்த 27 பேர் நேற்றிரவு பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொட பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 8 பேரும், பேருவளைப் பகுதியில் வீடொன்றில் தங்கிருந்த 13 பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒன்பது பேர் சிங்களவர்கள் எனவும் 14பேர் தமிழர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளார். கைதானவர்கள் 10 தமிழ் ஆண்களும், 7 சிங்கள ஆண்களும் 6 தமிழ்ப் பெண்களும், 04 தமிழ் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவித்த பொலீசார் இவர்கள் கிளிநொச்சி, திருமலை, நீர்கொழும்பு, வவுனியா, காலி மற்றும் அம்பலாங்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

அமெரிக்கத் தூதுவர், சோபித தேரர் சந்திப்பு-

அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அமைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொழும்பு கோட்டை நாக விஹாரைக்கு விஜயம் செய்த சிசன், சோபித தேரரை சந்தித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் பாதக நிலைமைகளையும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் சோபித தேரர் அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கியுள்ளார். 17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் எனவும் சோபித தேரர் அமெரிக்கத் தூதரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச வளம் முறையற்ற பாவனை குறித்து 89 முறைப்பாடுகள் பதிவு

– வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைளில் அரச வளங்களின்  முறையற்ற பாவனை குறித்து தேர்தல்கள் செயலகத்தில் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அரச சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் 31 முறைப்பாடுகளும், அரச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பில் 34 முறைப்பாடுகளும், அரச வளங்களை பகிர்ந்தளித்தமை தொடர்பில் 16 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் செயலகத்தின் விசேட முறைப்பாட்டுப் பிரிவு கூறியுள்ளது. அரச ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பில் 13 முறைப்பாடுகளும், தாக்குதல் தொடர்பில் 15 சம்பவங்களும், தேர்தல் வன்முறைகள் குறித்து 22 முறைப்பாடுகளும்  பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் நவிபிள்ளையின் சந்திப்புகள்-

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். அத்துடன், மனித உரிமைகள் தொடர்பில் செயற்படும் பெருந்தோட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்கவையும் அவர் இன்று சந்திக்கவுள்ளார். இன்றுபகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு செல்லும் அவர் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். இதன்போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேவா கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்குக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேற்றிரவு கொழும்பு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத ஸ்தலங்களில் மிருக பலிக்கு தடை-

மத ஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. புத்தளம் மாவட்டம் சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனு விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம்-

2013-08-28 17.21.09 2013-08-28 17.21.41 2013-08-28 17.23.02 2013-08-28 17.42.37 2013-08-28 19.34.48தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று பகுதியில் இன்றுமாலை இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட எட்டு வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசிங்கம் ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்;த்தன், மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் பி.அரியநேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா, வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அய்யும் அஸ்மின் ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்மைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். மேற்படி பரப்புரைக் கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

News

Posted by plotenewseditor on 28 August 2013
Posted in செய்திகள் 

தேர்தல்கள் தொடர்பில் முறைப்பாடு-

தேர்தல்கள் தொடர்பில் உள்ளுராட்சி சபை அமைச்சின் செயலாளரிடம் பெப்ரல் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் தேர்தல்களுக்காக பயன்படுத்தப்படும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஆராயுமாரே தாம் உள்ளுராட்சி மன்ற செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்டத்திட்டங்களை மீறிய 210 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலக முறைப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, குருநாகல் மாவட்டத்தில் 43 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது தவிர, மத்திய மாகாணத்தில் 101 முறைப்பாடுகளும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாhக தேர்தல்கள் செயலக முறைப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி நாடு திரும்பினார்-

தமது அரசியல் வாழ்க்கை மற்றும் நாடாளுமன்றத்துக்கு இடையே நெருக்கமான உறவு காணப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெலரூஸ் ராஜ்ஜியத்தின் தேசிய சபை பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே. இரண்டாம் உலக யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களுக்காக மின்ஸ்க் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பெலரூஸிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம்

. தாம் இலங்கை வந்திருப்பது, நாட்டின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மாத்திரமே என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நவநீதம்பிள்ளை நேற்று வடக்கு பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அவர் யாழ் அரச அதிபர், வட மாகாண ஆளுனர் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்;. வட மாகாண ஆளுநருடனான சந்திப்பின்பின் நவநீதம்பிள்ளை, யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்;. பின் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்ஸ்தானிகர் காரியாலயத்திற்கும் விஜயம் செய்தார். யாழ் மாவட்டத்தில் உள்ள குடியியல் சமூகம், பிரதேசவாசிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் கிளிநொச்சியில் உள்ள தேசிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் சென்றார். இதனை தொடர்ந்து நவநீதம்பிள்ளை, இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்கால், நந்திக்கடல் போன்ற பிரதேசங்களுக்குச் சென்றதுடன், பொதுமக்களுடனும் கலந்துரையாடியுள்ளார். இதன்போது காணாமல்போன தமது பிள்ளைகள், உறவினர்களை கண்டறிந்து தருமாறு பொதுமக்களால் அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் கேப்பாப்பிளவு, மாவடிகிராமம், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களுக்கு சென்ற அவர், அந்த பிரதேச பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அவற்றை நிவர்த்தி செய்ய தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அஞ்சல் நடவடிக்கைகளை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டாம்-

தேர்தல் ஆணையாளர்-  மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தபோது காணப்பட்ட சுதந்திர அஞ்சல் வசதிகளை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் அஞ்சல் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய இது தொடர்பாக அஞ்சல் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தல்களின் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், தாம் மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தபோது வழங்கப்பட்டிருந்த சுதந்திர அஞ்சலை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தநிலையில், அவ்வாறான வேட்பாளர்களது கடிதங்களை அஞ்சலகங்களில் ஏற்கக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

வவுனியா பன்றிக்கெய்தகுளம், பெரியமடு பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்-

Periyamadu Pantrikeithakulam August 27 -2013 (3).jp.g3Periyamadu Pantrikeithakulam August 27 -2013 (3).jp.g3Periyamadu Pantrikeithakulam August 27 -2013 (1).jpg1

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் நேற்றையதினம் வவுனியா பன்றிகெய்தகுளம் மற்றும் பெரியமடு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், நண்பர்களும், ஆதரவாளர்களும் ஊர்ப் பிரமுகர்களும் பிரதேச மக்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளை நேற்று நடத்தியிருந்தனர். இங்கு உரைநிகழ்த்திய அனைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்து கூட்டமைப்பை பெரும்பான்மை வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

மன்னாரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்-

Mar2 mar3 mar4 Mnr

DSC09611  DSC09642

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் பொது விளையாட்டரங்கில் இன்றுமாலை இடம்பெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும்இ பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடினார்கள். மன்னார் ஆயருடனான இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜாஇ தர்மலிங்கம் சித்தார்த்தன்இ சுரேஷ் பிரேமச்சந்திரன்இ செல்வம் அடைக்கலநாதன்இ எம்.ஏ சுமந்திரன்இ யோகேஸ்வரன்இ அரியநேந்திரன் மற்றும் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து மன்னார் பொது விளையாட்டரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தலைமையில் பொதுக்கூட்டம் ஆரம்பமானதுஇ இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட எட்டு வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். இதனையடுத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாஇ தர்மலிங்கம் சித்தார்;த்தன்இ சுரேஷ் பிரேமச்சந்திரன்இ செல்வம் அடைக்கலநாதன் எம்.ஏ.சுமந்திரன்இ சீ.யோகேஸ்வரன்இ பி.அரியநேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தாஇ வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.