வெலிவேரிய சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் 100 பேரிடமும் பொதுமக்களிடமும் சாட்சியங்கள் பதிவு சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை

வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பில் இராணுவத்தினர் 100 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பொதுமக்கள் 100 பேரின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்துடன் 93 இராணுவ சிப்பாய்களின் துப்பாக்கிகளை நாம் கைப்பற்றியுள்ளோம்.அவை அரச இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையிலேயே ஊடகங்களின் வீடியோ காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய எதிர்பார்க்கின்றோம்.   அச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் 43 பேர் காயமடைந்ததாகவும் கம்பஹா நீதிமன்றில் நீதிவான் டிகிரி ஜயதிலக முன்னிலையில் வெலிவேரிய சம்பவம் தொடர்பில் சாட்சியம் அளிக்கும் போது கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி ஜீ. ரணவீர தெரிவித்தார்.

மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய பிக்குவுக்கு அபராதம்

மது போதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய பௌத்த மத குருவிற்கு 13 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர் தொம்பே பகுதியைச் சேர்ந்த விகாராதிபதி ஒருவரான இந்தொலேபஞ்சாரதன ஹிமி என்பவருக்காகும். விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட மத குரு குற்றவாளியாகக் காணப்பட்டு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 31ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மஹோதலதாகம என்ற இடத்தில் பொலிஸ் உத்தரவை மீறி வேகமாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும் அச்சமயம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் இருந்ததுடன் அதிக மது போதையில் இருந்ததாகவும் மஹவ பிரதான மஜிஸ்திரேட் ருச்சினி ஜயவர்தன முன் விசாரணைக்கு எடுக்கப்பட் வழக்கில் பொலிஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டதது-