தேர்தலை நீதியாக நடத்துமாறு இந்தியா வலியுறுத்தல்-

வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும்இ நியாயமாகவும்இ நம்பகமான முறையிலும் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.  இந்தியாவின் 67 ஆவது சுதந்திர தினத்தையொட்டிஇ கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா வெளியிட்டுள்ள செய்தியிலேயே  மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில்இ யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய மனிதநேய உதவிகளை இந்திய வழங்கி வந்துள்ளது. அதேவேளைஇ பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக பகைமையில் பெரும்பாலும் தமிழ்மக்களின் உரிமைகள் சேமநலன்களை அலட்சியப்படுத்திவிடக் கூடாது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகும். 13 ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவதற்கான அரசியல் யோசனைகள் தொடர்பாக நம்பகரமான பேச்சுவார்த்தைகள் இனப்பிரச்சினை தீர்வுக்கு ஆக்கபூர்வமாக வழிவகுக்கும். நிலையான அரசியல் தீர்வு ஒன்று காண்பதாகஇ இந்தியாவுக்கும்இ அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும். சமத்துவம்இ நீதிஇ கௌரவம்இ சுயமரியாதையுடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமேஇ இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் சிறு வயது திருமணங்கள் அதிகரிப்பு-  

2009ஆம் ஆண்டளவில் இலங்கையில் சிறு வயது திருமணங்கள் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலேயே இவ்வாறான சிறுவயது திருமணங்கள் இடம்பெற்றுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இது தவிரஇ 20 வயதுக்கு குறைவான இளம் பெண்கள் தாய்மையுறும் நிலைமையும் 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. நகரப் பிரதேசங்களில் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்;படும் நிலையும் அதிகரித்துள்ளது. எனவேஇ சிறுவயது பெண்கள் இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுகின்றமை தொடர்பில் தெளிவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முனைப்புக் காட்டவேண்டும். ஆசிய வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பெரிதும் பாதிப்பற்ற நிலையில் உள்ளது என யுனிசப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வர தீர்மானம் இல்லை-

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திட்டத்தில் இல்லையென இலங்கைக்கான நியூசிலாந்து கொன்சொல் அலுவலகம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வர இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை கொன்சொல் சேனக சில்வா கூறியுள்ளார். நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலி இந்த வாரத்தில் இலங்கைக்கு வருகைரவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த செய்திகளில் உண்மை இல்லை என சேனக சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாய்மார் வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டம்-

5 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் தாய்மார்கள் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதை தடைசெய்யும் சட்டத்தை உடன் அமுலுக்கு கொண்டுவரவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார்கள் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதை தடைசெய்வதற்கு பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டிருந்ததாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். எனினும்இ அந்த யோசனையை நடைமுறைப்படுத்தாது 5வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் உள்ள தாய்மார்களுக்கு அந்த தடையை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வாக்காளர் அட்டை விநியோகம்-

வடக்குஇ மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலின் வாக்காளர் அட்டை விநியோகத்தை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்க தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. வாக்குச் சீட்டுகளையும் அதேநாளில் தபாலில் சேகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 8ஆம் திகதி விசேட விநியோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் கூறுகின்றது. வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் செப்டெம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் செயலக ஆலோசகர் டபிள்யூ.பீ.சுமனசிறி தெரிவித்துள்ளார். இம்முறை மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் நீடிப்பு-

யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் மேலும் ஒரு வருடாகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு  அறிவித்துள்ளது. மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின்  10ஆம் பிரிவின் 2ஆம் உப பிரிவின் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இந்த காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் பதவி காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையிலேயே எதிர்வரும் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜூலை 29ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் கூறியுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பாதுகாப்பு செயலர் சந்திப்பு-

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ சந்தித்து பேச்சு நடத்துவார் என பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் ஜகத் ஜெயசூரிய அறிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது நாட்டின் பாதுகாப்பு நிலமை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்கு பாதுகாப்பு செயலாளர் தெளிவுபடுத்துவார் எனவும் பிரதம பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை முறியடிப்பதற்கு நாம் கவனமாக செயற்பட வேண்டும் என ஜெனரல் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.