மன்னார் உயிர்த்தராசன்குளத்தில் கூட்டமைப்பு வேட்பாளர் கலந்துரையாடல்-
மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட உயிர்த்தராசன்குளம் கிராமத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்திருந்த மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலக்கம் 03இல் போட்டியிடும் புளொட் வேட்பாளர் இருதயநாதன் சார்ள்ஸ் அவர்கள் கிராம மக்களையும் கிராம மட்டத்திலான அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்ட வேட்பாளர் சார்ள்ஸ் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறியதுடன் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டி நிற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். வேட்பாளர் சார்ள்ஸூடன்; கூட்டமைப்பின் வேட்பாளர்கள் குணசீலன், சிவகரன், விமலசேகரம் மற்றும் ஆதரவாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இதேவேளை வேட்பாளர் இருதயநாதன் சார்ள்ஸ் அவர்களுக்கு மன்னார் அடம்பன் பிரதேசத்தில் நேற்று முன்தினம் கிளை அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது இவ்விதமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட புளொட் வேட்பாளர் இருதயநாதன் சார்ள்ஸ் மற்றும் ஆதரவாளர்கள் தலைமன்னார் பியர் கிராமங்களுக்கு கடந்த 13ஆம் திகதி விஜயம் செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்