மன்னார் உயிர்த்தராசன்குளத்தில் கூட்டமைப்பு வேட்பாளர் கலந்துரையாடல்-
மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட உயிர்த்தராசன்குளம் கிராமத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்திருந்த மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலக்கம் 03இல் போட்டியிடும் புளொட் வேட்பாளர் இருதயநாதன் சார்ள்ஸ் அவர்கள் கிராம மக்களையும் கிராம மட்டத்திலான அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்ட வேட்பாளர் சார்ள்ஸ் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறியதுடன் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டி நிற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். வேட்பாளர் சார்ள்ஸூடன்; கூட்டமைப்பின் வேட்பாளர்கள் குணசீலன், சிவகரன், விமலசேகரம் மற்றும் ஆதரவாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இதேவேளை வேட்பாளர் இருதயநாதன் சார்ள்ஸ் அவர்களுக்கு மன்னார் அடம்பன் பிரதேசத்தில் நேற்று முன்தினம் கிளை அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது இவ்விதமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட புளொட் வேட்பாளர் இருதயநாதன் சார்ள்ஸ் மற்றும் ஆதரவாளர்கள் தலைமன்னார் பியர் கிராமங்களுக்கு கடந்த 13ஆம் திகதி விஜயம் செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்
இந்திய சிறைகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு
இந்தியாவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகஇ சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய சிறைகளில் உள்ள இலங்கையர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பீ.பீ.குலதுங்க குறிப்பிட்டுள்ளார். தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கைதி பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன. இதன்படி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 கைதிகள் இந்தியாவுக்கு மாற்றப்படவுள்ளனர். அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்இ எஞ்சியவர்களை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி – சுண்ணாகம் புதிய மின் விநியோக கட்டமைப்பு–
கிளிநொச்சியில் இருந்து சு ண்ணாகம் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதியுயர் மின் விநியோக கட்டமைப்பின் ஊடாக இன்றுமுதல் மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளது. இந்த மின்சார விநியோக கட்டமைப்பு அதிக அழுத்த மின்கம்பிகளைக் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதற்கமைய ஏற்கனவே முன்னெடுக்கப்படுகின்ற மின்சார விநியோகம்இ ஒரு இலட்சம் 32 ஆயிரம் வோல்ட்களைக் கொண்ட அதியுயர் மின் அழுத்த கட்டமைப்பிற்கு இன்று மாற்றப்படவுள்ளது. ஒருமாத காலத்திற்கு பரீட்சார்தமாக இந்த மின்விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. கச்சதீவில் இந்திய கொடியை ஏற்றச் சென்றவர்கள் கைது- கச்சதீவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதற்குச் சென்ற தேவர் தேசியப் பேரவையைச் சேர்ந்த 69பேரை இந்திய பொலீசார் கைது செய்துள்ளனர். கச்சத்தீவை மீட்கக் கோரியும்இ அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாகவும் தேவர் தேசியப் பேரவையினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து பேரவையின் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் அரசரடியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலை முன்பு நேற்று கூடியள்ளனர். சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள் கச்சத்தீவுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டுள்ளனர். தகவலறிந்த பொலீசார் அங்கு விரைந்துஇ கே.சி.திருமாறன் உள்ளிட்ட 69 பேரையும் கைது செய்துள்ளனர். விசாரணையின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்- உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இங்குவரும் நவநீதம்பிள்ளை ஓகஸ்ட் 25ஆம் திகதிமுதல் 31ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் நவநீதம்பிள்ளை நீதித்துறை சிரேஷ்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். அத்துடன்இ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஇ பாதுகாப்பு செயலர்இ அமைச்சர்கள்இ அதிகாரிகள்இ அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
பொதுநலவாய ஏற்பாட்டுக்குழு இலங்கைக்கு விஜயம்-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் ஏற்பாடுகளை அவதானிப்பதற்காகஇ 15 நாடுகளின் 70 பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இலங்கையில் தங்கி இருப்பார்கள் என்றுஇ பொதுநலவாய நாடுகளின் செயற்குழு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கவென இலங்கை வருகின்ற அரச தலைவர்களுக்கான ஏற்பாடுகளை அவதானிப்பதே இவர்களின் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் இந்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. கண்டியில் ஏழு அரேபியர்கள் கைது- இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட துண்டுப் பிரசுரங்களை கண்டி நகரில் விநியோகித்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் அரேபிய நாட்டைச் சேர்ந்த ஏழு பேரை கண்டி பொலீசார் கைது செய்துள்ளனர். கண்டி நகரில் பொதுமக்கள் மத்தியில் மேற்படி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படுவதாக பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அரேபியர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது தாம் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
உணவுப் பொருட்கள் சந்தையிலிருநது அகற்றல்-
கடந்த 48 மணித்தியாலங்களுள்இ வே புரோட்டின் கலக்கப்பட்ட 99 ஆயிரத்து 641 உணவுப் பொருட்கள் நாட்டின் சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. இலங்கை பொதுஜன சுகாதார பரிசோதகர்களின் சங்கம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. பால்மாஇ சொக்கலேட்கள்இ சீஸ் மற்றும் சீஸ் உள்ளடக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்பனவே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளன.