மூளாய் பகுதியில் கூட்டமைப்பு வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தேர்தல் கருத்தரங்கு-

Card copyயாழ். மூளாய் பகுதியில் நேற்று முன்தினம் மாலை வட மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்களும், உள்ளுராட்சி சபைகளின் அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய அனைவரும், தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசியுள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் காலை கொக்குவில் மற்றும் சுன்னாகம் கந்தரோடைப் பிரதேசங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கருத்தரங்குகள்; இடம்பெற்றுள்ளன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் ஆகியோரும், உள்ளுராட்சி சபை அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். இதேவேள சங்கத்தானை, சித்தங்கேணி பிரதேசங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோர்; தேர்தல் தொடர்பிலான கருத்தரங்குகளை நடத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.