வவுனியா கோயில்குளம் வீதி புனரமைப்பு-
வவுனியா கோயில்குளம் ஐந்தாம் ஒழுங்கை வீதியானது குன்றும் குழியுமாக மிகவும் பழுதடைந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக திருத்தப்படாதிருந்தது. மேற்படி வீதியினைத் திருத்தி அமைத்துத் தருவதற்கு ஆவன செய்யுமாறு கோயில்குளம் பிரதேச மக்கள்; கையெழுத்திட்ட மகஜர் என்றினை கடந்த யூலை மாதத்தில் வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களிடம் கையளித்திருந்தனர். இதனையடுத்து முன்னாள் நகரசபை உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் வவுனியா நகரசபையினரிடம் மேற்படி பிரதேச மக்களின் வீதிப் பிரச்சினையைக் கவனத்திற் கொண்டுவந்திருந்தார். இந்நிலையில் நேற்றையதினம் வவுனியா நகரசபையினர் கோயில்குளம் ஐந்தாம் ஒழுங்கைக்கு உரியதான கோயில்குளம் பிரதான வீதியில் இருந்து தெற்கிலுப்பைக்குளம் எல்லைவரையிலான நேர்ப் பாதையினையும், இப்பாதையில் உள்ள குறுக்குப்பாதையினையும் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் கண்காணிப்பின்கீழ் திருத்தியமைத்து கொடுத்துள்ளனர்.