சாவகச்சேரியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்-
யாழ். சாவகச்சேரி நகர நவீன சந்தைத் தொகுதியில் இன்றுமுற்பகல் தமிழ்; தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டத்தரணி சயந்தன் ஆகியோர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்பான்மையாக வாக்களித்து கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த சாவகச்சேரி பகுதி மக்கள், சாவகச்சேரியில் நீங்கள் வந்து பிரச்சாரம் செய்யவேண்டிய அவசியமே கிடையாது. அந்தளவிற்கு தாங்;கள் தெளிவாகவுள்ளோம்.
இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களிப்பதென சாவகச்சேரி பிரதேச மக்கள் அனைவருமே முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.