ஓமந்தை மற்றும் மதுராநகர் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கும், கலந்துரையாடலும் நேற்றுமாலை வவுனியா, ஓமந்தை, நொச்சிகுளம் மற்றும் வவுனியா மதுராநகர் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், பிரதேசசபை உறுப்பினர் ராஜசேகர் உள்ளிட்ட ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் மேற்படி கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். ஓமந்தை, நொச்சிகுளம் ஆதி விநாயகர் கோயிலடியில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் மிகவும் அக்கறையெடுத்து தமிழ்; தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். இதேவேளை நேற்றுமாலை 4 மணியளவில் வவுனியா மதுராநகர் கண்ணகி விளையாட்டுக் கழகத்தில் விளையாட்டுக ;கழகத் தலைவர் மற்றும் அங்கத்தவர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பிரதேச சபை உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் தேர்தல் குறித்த விரிவான கருத்தரங்கொன்றினை நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது