வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்-

தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான முதற்கட்டப் பிரசாரம் எதிர்வரும் 26ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் வவுனியா குருமண்காடு கலைமகள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இப்பிரசாரக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளின் தலைவர்களான இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நீதியரசரும் வட மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவனியா மாவட்ட வேட்பாளர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர். இதன்போது கூட்டமைப்பின் வவுனியா மாவட்;ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.