மன்னாரில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்-

tnaவட மாகாணசபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோதராதலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து கட்சி தலைவர்களான இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

இந்நிகழ்வின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும்  8 வேட்பாளர்களின் அறிமுகமும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கூட்டமைப்பு பிரதிநிதிகள், உள்ளுராட்சிசபை தலைவர்கள், அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.