முல்லைத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை நிகழ்வு-

4வட மாகாணசபைத் தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை நிகழ்வு இன்றுமுற்பகல் முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு பிரதேசத்தில் உள்ள வள்ளுவர் நகர், ரெட்பானா பகுதியில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முலலைத்தீவு மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் பிரதேச மக்களுடன் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். வேட்பாளர் திரு.கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களுடன் நண்பர்களும், ஆதரவாளர்களும் மேற்படி கலந்துரையாடலை நடத்தியிருந்தனர். இதேவேளை இன்று பகல் முல்லைத்தீவு, ஓட்டுசுட்டான், வித்தியாபுரம் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் தேர்தல் கருத்தரங்கொன்றினை நடத்தியிருந்தார். வித்தியாபுரம், சாய்சமுர்த்தி சிறுவர் பாடசாலையில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வினைத் தொடர்ந்து இந்த கருத்தரங்கு இடம்பெற்றது. வேட்பாளர் திரு.கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும், ஊர்ப் பிரமுகர்களும் இந்த கருத்தரங்கினை நடத்தியிருந்தனர். இங்கு உரையாற்றிய அனைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மையாக வெற்றிபெறச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியதுடன், தமிழ் மக்கள் வாக்களிப்பில் மிகவும் அக்கறையெடுத்து கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மையாக வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.