வவுனியா பன்றிக்கெய்தகுளம், பெரியமடு பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் நேற்றையதினம் வவுனியா பன்றிகெய்தகுளம் மற்றும் பெரியமடு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், நண்பர்களும், ஆதரவாளர்களும் ஊர்ப் பிரமுகர்களும் பிரதேச மக்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளை நேற்று நடத்தியிருந்தனர். இங்கு உரைநிகழ்த்திய அனைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்து கூட்டமைப்பை பெரும்பான்மை வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டனர்.