இணுவில் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள்-

யாழ். இணுவில் பகுதியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேர்தல் கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன. இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயிலடி மற்றும் அதற்கு அண்மையிலுள்ள விளையாட்டுத் திடல் ஆகியவற்றில் மேற்படி தேர்தல் கருத்தரங்குள் இடம்பெற்றுள்ளன. இக்கருத்தரங்குகளில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உதயகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் பா. கஜதீபன் ஆகியோர் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய அனைவரும், வட மாகாணசபைத் தேர்தலின் முக்கியத்துவம் தொடர்பிலும், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டிய கடமையையும் எடுத்துக் கூறியதுடன், பெருந்தொகையான மக்கள் வாக்களித்து, தமிழ் தேசியக் கூடடமைப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார்கள். இக்கருத்தரங்குகளில் பெருந்தொகையான இளைஞர்களும், முதியவர்களும், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பெருமளவிலானோரும் கலந்து கொண்டிருந்தனர்.