வவுனியா கோயில்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் நேற்றையதினம் வவுனியா, கோயில்குளம், தெற்கிலுப்பைக்குளம், சமளங்குளம் மற்றும் எல்லப்பர் மருதங்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் மேற்படி கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். கோயில்குளம் மற்றும் தெற்கிலுப்பைக்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடல்களில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் மிகவும் அக்கறையெடுத்து தமிழ்; தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்றுமாலை சமளங்குளம் மற்றும் எல்லப்பர் மருதங்குளம் பிரதேசங்களில் தேர்தல் கருத்தரங்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன் ஆதரவாளர்களும், ஊர்ப்பிரமுகர்களும் தேர்தல் குறித்த விரிவான கருத்தரங்குகளை அப்பகுதிகளில் நடத்தியிருந்தனர்.