ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் நவிபிள்ளையின் சந்திப்புகள்-
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். அத்துடன், மனித உரிமைகள் தொடர்பில் செயற்படும் பெருந்தோட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்கவையும் அவர் இன்று சந்திக்கவுள்ளார். இன்றுபகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு செல்லும் அவர் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். இதன்போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேவா கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்குக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேற்றிரவு கொழும்பு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் சட்டங்களை மீறிய 40பேர் கைது-
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புபட்ட 40 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம், அச்சுறுத்தல், தாக்குதலுடன் தொடர்பு போன்ற காரணங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுடன் தொடர்புடைய 71 வன்முறைச் சம்பவங்கள் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளது. அதில் குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் ஹட்டன் பகுதிகளில் இருந்தே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் சட்டங்களை மீறும் நபர்கள்மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் கைது-
காலி, அம்பலாங்கொட பகுதியிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல ஆயத்தமாக இருந்த 27 பேர் நேற்றிரவு பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொட பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 8 பேரும், பேருவளைப் பகுதியில் வீடொன்றில் தங்கிருந்த 13 பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒன்பது பேர் சிங்களவர்கள் எனவும் 14பேர் தமிழர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளார். கைதானவர்கள் 10 தமிழ் ஆண்களும், 7 சிங்கள ஆண்களும் 6 தமிழ்ப் பெண்களும், 04 தமிழ் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவித்த பொலீசார் இவர்கள் கிளிநொச்சி, திருமலை, நீர்கொழும்பு, வவுனியா, காலி மற்றும் அம்பலாங்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர்.
அமெரிக்கத் தூதுவர், சோபித தேரர் சந்திப்பு-
அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அமைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொழும்பு கோட்டை நாக விஹாரைக்கு விஜயம் செய்த சிசன், சோபித தேரரை சந்தித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் பாதக நிலைமைகளையும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் சோபித தேரர் அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கியுள்ளார். 17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் எனவும் சோபித தேரர் அமெரிக்கத் தூதரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச வளம் முறையற்ற பாவனை குறித்து 89 முறைப்பாடுகள் பதிவு-
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைளில் அரச வளங்களின் முறையற்ற பாவனை குறித்து தேர்தல்கள் செயலகத்தில் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அரச சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் 31 முறைப்பாடுகளும், அரச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பில் 34 முறைப்பாடுகளும், அரச வளங்களை பகிர்ந்தளித்தமை தொடர்பில் 16 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் செயலகத்தின் விசேட முறைப்பாட்டுப் பிரிவு கூறியுள்ளது. அரச ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பில் 13 முறைப்பாடுகளும், தாக்குதல் தொடர்பில் 15 சம்பவங்களும், தேர்தல் வன்முறைகள் குறித்து 22 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் நவிபிள்ளையின் சந்திப்புகள்-
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். அத்துடன், மனித உரிமைகள் தொடர்பில் செயற்படும் பெருந்தோட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்கவையும் அவர் இன்று சந்திக்கவுள்ளார். இன்றுபகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு செல்லும் அவர் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். இதன்போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேவா கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்குக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேற்றிரவு கொழும்பு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத ஸ்தலங்களில் மிருக பலிக்கு தடை-
மத ஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. புத்தளம் மாவட்டம் சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனு விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.