செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமாலை வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்);, புளொட்டின் முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், புளொட்டின் வவுனியா நகரசபை உறுப்பினர் க.பார்த்தீபன் ஆகியோரும் ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும் இக் கலந்துரையாடலை நடத்தியிருந்தனர். இதன்போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேறிய மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதுடன், இங்கு உரையாற்றிய அனைவரும், இம்முறை வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையாக வெற்றிபெற வேண்டுமென்பதையும், அதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்கச் செல்ல வேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.