இணுவில், கொக்குவில் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்-

யாழ். இணுவில் பகுதியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று இடம்பெற்றுள்ளது. இணுவில் இளந்தாரி கோயிலடியில் இந்த தேர்தல் கருத்தரங்கு இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உதயகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். இந்தக் கருத்தரங்கில் ஊர்ப்பிரமுகர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை யாழ். கொக்குவில் பிரதேசத்தில் நேற்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இங்கு இடம்பெற்ற தேர்தல் கருத்தரங்கொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினார்கள். வட மாகாணசபைத் தேர்தலின் முக்கியத்துவம், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டிய கடமை என்பன தொடர்பில் இதன்போது விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இக்கருத்தரங்கில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.