ரயில் சேவைகளை மார்ச்சுக்குள் யாழ் வரை விஸ்தரிக்க நடவடிக்கை–

வடபகுதிக்கான ரயில் சேவைகளை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் யாழ்பாணம் வரை விஸ்தரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக ஓமந்தையிலிருந்து இம்மாதம் 14ஆம் திகதி தொடக்கம் கிளிநொச்சிவரை ரயில்சேவை விஸ்தரிக்கப்படவுள்ளது. சுமார் 23 வருடங்களின் பின்னர் கிளிநொச்சிவரை ரயிலில் பயணிப்பதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கவுள்ளது. இதனையொட்டி நான்கு ரயில் நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.ஏ.சிசிர குமார தெரிவித்துள்ளார்.