சுழிபுரம், வலக்கம்பரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டம்-

2013-09-03 18.25.36யாழ். சுழிபுரம் வலக்கம்பரை அம்மன் கோவிலடியில் இன்றுமாலை 6மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது. பிரதேசசபைத் தலைவர் திருமதி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் (வேட்பாளர்), சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், சரவணபவன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் (வேட்பாளர்), என்.சிறீகாந்தர், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள்; உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பிரதேச சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும், மிகப் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.2013-09-03 18.17.592013-09-03 18.14.382013-09-03 18.24.222013-09-03 18.31.39_12013-09-03 18.40.282013-09-03 19.26.532013-09-03 19.49.572013-09-03 20.15.572013-09-03 18.32.00