நாவற்காடு பகுதியில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்-
முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளை, நாவற்காடு பொதுநோக்கு மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இலக்கம் 06இல் கூட்டமைப்பில் போட்டியிடும் கமலா அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மேற்படி தேர்தல் பரப்பரை நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர் கந்தையா சிவநேசன்(பவன்), ஊர்ப்பிரமுகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். மேற்படி கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றிய அனைவரும், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கூட்டமைப்பிற்கே வாக்களித்து கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். இக்கூட்டத்தில் பெருமளவில் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.