வடமராட்சி திக்கம் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-
யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றது. திரு. செந்தில்வேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சரவணபவன், அரியநேந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் திரு.சி.வி விக்னேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் உள்ளுராட்சி தலைவர்கள், அங்கத்தவர்கள், கட்சிப் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.