செட்டிகுளம், நேரியகுளம் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்-

IMG_5378தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்றுமாலை வவுனியா, செட்டிகுளம் மற்றும் நேரியகுளம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோருடன், முக்கிய பிரமுகர்களும், ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போதான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்கள் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் மிகவும் அக்கறையெடுத்து தமிழ்; தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். இந்த கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களில் பெருமளவிலான பொதுமக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது9899_451850941595502_991904225_n1234601_451807484933181_1967033307_nIMG_5367IMG_5379IMG_5394

வாக்காளர் அட்டை விநியோகம்-

வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேடதினமாக இன்றைய தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றுகாலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் டபிள்யூ.கே.ஜீ.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் நிறைவுசெய்ய தபால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. 13ஆம் திகதிவரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தமது பிரதேசத்திற்குரிய தபாலகத்தில் அதனை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கான வெளிநாட்டு கண்காணிப்பு குழு, இந்த மாதம் 13ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இக்குழு எதிர்வரும் 14ம்திகதி தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்திக்கவுள்ளது. தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேட்பட்ட கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வரவிருப்பதாக பேச்சாளர் கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.கோபாலசாமி, மாலைதீவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட் பாருக் உள்ளிட்ட 20 பேரும், தேர்தல் நடைபெறவுள்ள மாகாணங்களுக்கு சென்று நேரில் பார்வையிடவுள்ளனர்.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு-

வவுனியா வேப்பங்குளத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் வாழ்ந்த சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த பெருமாள் நிசாந்தினி என்ற 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு நேற்றுஇரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சிறுமி இதே காப்பத்தில் தங்கியுள்ள தனது சகோதரியுடன் நேற்று வாய்த்தர்க்கப்பட்டிருந்த நிலையில் காப்பக வளாகத்தில் தூக்கில் தொங்கியுள்ளதாக காப்பகத்தின் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இச் சிறுமியின் தந்தை நோய் வாய்ப்பட்ட நிலையில் வாழ்வதாகவும் தாயாரால் பிள்ளைகளை பராமரிக்க முடியாத நிலையில் தமது காப்பகத்தில் இவர்களை சேர்த்திருந்ததாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.