நேரியகுளம் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்றுமாலை வவுனியா, செட்டிகுளம் பகுதியிலுள்ள நேரியகுளத்தில் இடம்பெற்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோருடன், ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக வாக்குக் கேட்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். இத் தேர்தல் பிரச்சாரங்களின் போதான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்கள் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், இம்முறை வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெறவேண்டுமெனவும், இதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சிரமம் பாராது காலையிலேயே சென்று கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.