நாவாந்துறை, அராலி பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம்-

2013-09-12 18.46.47Navanthurai (1)யாழ். நாவாந்துறைப் பகுதியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. திரு. ஜேக்கப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா மற்றும் யாழ் மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பிரதேச சபை தலைவர்கள், அங்கத்தவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

2013-09-12 18.29.00 2013-09-12 18.30.46 2013-09-12 18.44.10 2013-09-12 18.45.08

அத்துடன் அராலிப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களின் தலைமையில் இன்றுமாலை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ், வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோரும் யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

2013-09-12 12.36.40

இதேவேளை இன்றுபிற்பகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு யாழ் விடத்தல்பளை சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து கூட்டமைப்பை பெரும்பான்மை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டதுடன், அனைத்து தமிழ்மக்களும் அக்கறைகொண்டு வாக்களிக்கச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.