வவுனியா நெடுங்கேணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று வவுனியா நேடுங்கேணியில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களும் இக்கூட்டத்தில் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் உள்ளுராட்சிசபை தலைவர்கள், உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊர்ப் பிரமுகர்கள் ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். வேட்பாளர் அறிமுகமும் இதன்போது இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு) அவர்களின் இல்லத்தில், கூட்டமைப்பின் வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு) அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோருக்குமிடையிலான தேர்தல் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.