Header image alt text

சுழிபுரம், சங்கானைப் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

2013-09-13 18.03.23periya pilavu chulipuram (1) 2013-09-13 18.03.23periya pilavu chulipuram (3) 2013-09-13 18.03.23periya pilavu chulipuram (4) 2013-09-13 18.03.23periya pilavu chulipuram (5) 2013-09-13 18.03.23periya pilavu chulipuram (6) 2013-09-13 18.03.23periya pilavu chulipuram (7) 2013-09-13 18.03.23periya pilavu chulipuram (8)யாழ். சுழிபுரம் பெரியபுலவு அண்ணா சனசமூக நிலையத்தில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், அனந்தி, கஜதீபன். ஆனோல்ட், குகதாசன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், திருகோணமலை நகரசபைத் தலைவர் செல்வராஜா ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

2013-09-13 19.42.14sanganai 2013-09-13 19.43.09sanganaiஇதேவேளை இன்றுமாலை சங்கானைப் பிரதேசத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், அனந்தி, கஜதீபன். ஆனோல்ட், குகதாசன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், திருகோணமலை நகரசபைத் தலைவர் செல்வராஜா ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருமளவு பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். 

ஒற்றையாட்சிக்குள் நியாயமான தீர்வினை எதிர்பார்க்க முடியாது- திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்-

Captureயாழ்ப்பாணம் வலி.வடக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் எதிர்காலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அமைப்பதற்குப் பாவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவயிலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் தற்போது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. கூட்டமைப்பின் வெற்றிக்காக அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு மக்கள் வந்துள்ளதாக நாம் அறிகின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகவும் இப்போது உள்ளது.

நாங்கள் செல்லும் இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பாரிய ஆதரவு இருந்தாலும், அவர்களுடைய வாக்கு வீதத்தை பெறுவதில் தான் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். வழக்கமாக 50 – 55 வீதம்தான் தமிழ் மக்களுடைய வாக்குவீதம் இருந்தது. ஆனால் இதனை 75 வீதமாக அதிகரிக்க வேண்டும்.

இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் சிறந்த தீர்வினை வழங்க முடியாது. ஒற்றையாட்சிக்குள் ஒரு நியாயமான தீர்வினை எதிர்பார்க்கவும் முடியாது. சமஷ்டி முறையிலான ஒரு தீர்வே தமிழ் மக்களுக்கு நியாயமானதாக அமையும். இவ்விடயத்தில் சர்வதேச சமூகமும் கவனம் செலுத்துகின்றது. Read more

வவுனியா கோவில் குஞ்சுக்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நேற்றுமாலை வவுனியா கோவில் குஞ்சுக்குளத்தில் இடம்பெற்றது. வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளருமான ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்களும், ஊர்ப் பிரமுகர்களம் இக்கருத்தரங்கில் உரையாற்றினார்கள். இக் கருத்தரங்கில் வேட்பாளரின் நண்பர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களுமென பலர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை வவுனியா சுந்தரபுரம் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரின் மக்கள் சேவைகள், அவர்கள் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்ததுமான தெருவெளி நாடகமொன்றும் நேற்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது.