சுழிபுரம், சங்கானைப் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-
யாழ். சுழிபுரம் பெரியபுலவு அண்ணா சனசமூக நிலையத்தில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், அனந்தி, கஜதீபன். ஆனோல்ட், குகதாசன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், திருகோணமலை நகரசபைத் தலைவர் செல்வராஜா ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை இன்றுமாலை சங்கானைப் பிரதேசத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், அனந்தி, கஜதீபன். ஆனோல்ட், குகதாசன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், திருகோணமலை நகரசபைத் தலைவர் செல்வராஜா ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருமளவு பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.