வவுனியா கோவில் குஞ்சுக்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நேற்றுமாலை வவுனியா கோவில் குஞ்சுக்குளத்தில் இடம்பெற்றது. வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளருமான ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்களும், ஊர்ப் பிரமுகர்களம் இக்கருத்தரங்கில் உரையாற்றினார்கள். இக் கருத்தரங்கில் வேட்பாளரின் நண்பர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களுமென பலர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை வவுனியா சுந்தரபுரம் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரின் மக்கள் சேவைகள், அவர்கள் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்ததுமான தெருவெளி நாடகமொன்றும் நேற்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது.