Header image alt text

கரணவாய், ஏழாலை பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் மற்றும் நாட்டுக்கூத்து-

யாழ். கரணவாய் குஞ்சர்கடைப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று இன்றுபிற்பகல் இடம்பெற்றது. வடமராட்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் நாகலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல வேட்பாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேவேளை இன்றுமாலை யாழ் ஏழாலை மத்தியில் வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ் அவர்களின் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன், பா.கஜதீபன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல வேட்பாளர்களும், கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பானதும், தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் பற்றியதுமான நாட்டுக்கூத்தும் இடம்பெற்றது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து தொடர்ச்சியாக யாழ். குடாநாடு முழுவதும் இந்த நாட்டுக்கூத்து நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பருத்தித்துறை, சிறுப்பிட்டி பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டங்கள்-

யாழ் பருத்தித்துறை நாலாம் குறுக்குத்தெரு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று இன்றுமுற்பகல் இடம்பெற்றது. பருத்தித்துறை நகரசபையின் முன்னைநாள் தலைவர் வின்சென்ற் கெனடி தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை யாழ். சிறுப்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டமொன்று இன்றுபிற்பகல் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன், பா.கஜதீபன், ஐங்கரநேசன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல வேட்பாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

கொல்லங்கலட்டியில் கூட்டத்திற்கு சென்ற மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிப்பு-

annar and kajatheepanயாழ். தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு ஒன்று இன்றுமாலை 5மணியளவில் நடாத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. இதற்காக பெருமளவிலான மக்கள் அங்கு கூடியிருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், சர்வேஸ்வரன் ஆகியோர் இக்கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை இராணுவத்தினர் பொல்லு தடிகளுடன் வந்து விரட்டியடித்து கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கதவினையும் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இது சம்பந்தமாக உடன் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பி நிலைமைகளை அவதானித்திருந்தார். இந்நிலையில் இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மேற்படி கூட்டத்திற்காக மக்கள் மீளவும் அங்கு கூடியபோது அங்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தனும், பா.கஜதீபனும், சர்வேஸ்வரனும் அங்கிருக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி கூட்டத்தை பிற்போட்டுச் சென்றனர். இதேவேளை சம்பவத்தையடுத்து பவ்ரல் அமைப்பின் பிரதிநிதிகளும் அவ்விடத்திற்கு வருகைதந்து நிலைமையினை கண்காணித்துச் சென்றனர்.

வவுனியா காத்தார் சின்னக்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு-

IMG_0119 IMG_0085  IMG_0099  IMG_0112தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நேற்றுமாலை 4.00 மணியளவில் வவுனியா காத்தார் சின்னக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளருமான ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்களும், ஊர்ப் பிரமுகர்களும் இக்கருத்தரங்கில் உரையாற்றினார்கள். இக் கருத்தரங்கில் வேட்பாளர் ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்களின் நண்பர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களுமென பலர் கலந்து கொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டுமென்றும், இதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதுடன், வட மாகாணசபை நிர்வாகம், அதற்குள்ள அதிகாரங்கள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.