கரணவாய், ஏழாலை பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் மற்றும் நாட்டுக்கூத்து-

யாழ். கரணவாய் குஞ்சர்கடைப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று இன்றுபிற்பகல் இடம்பெற்றது. வடமராட்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் நாகலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல வேட்பாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேவேளை இன்றுமாலை யாழ் ஏழாலை மத்தியில் வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ் அவர்களின் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன், பா.கஜதீபன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல வேட்பாளர்களும், கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பானதும், தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் பற்றியதுமான நாட்டுக்கூத்தும் இடம்பெற்றது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து தொடர்ச்சியாக யாழ். குடாநாடு முழுவதும் இந்த நாட்டுக்கூத்து நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது