பருத்தித்துறை, சிறுப்பிட்டி பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டங்கள்-

யாழ் பருத்தித்துறை நாலாம் குறுக்குத்தெரு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று இன்றுமுற்பகல் இடம்பெற்றது. பருத்தித்துறை நகரசபையின் முன்னைநாள் தலைவர் வின்சென்ற் கெனடி தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை யாழ். சிறுப்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டமொன்று இன்றுபிற்பகல் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன், பா.கஜதீபன், ஐங்கரநேசன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல வேட்பாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.