Header image alt text

கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர்களை ஆதரித்து வெளியிடப்பட்ட குறும்படம்

https://www.youtube.com/watch?v=Yw06Fup2_iI&feature=youtube_gdata_player

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளன வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அப்பகுதி  ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இன்று வவுனியா நகரெங்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில்

https://www.youtube.com/watch?v=ANiNV3aEQvw&feature=youtube_gdata_player

 

 

யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் இன்று யாழ். சாவகச்சேரி பஸ் நிலையம், குப்பிளான், காரைநகர் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றது. சாவகச்சேரி பஸ் நிலையத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு சாவகச்சேரி நகரசபைத் தலைவர் தேவசகாயம்பிள்ளை அவர்கள் தலைமை வகித்ததுடன், குப்பிளானின் இடம்பெற்ற கூட்டத்திற்கு வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ் அவர்கள் தலைமை வகித்தார். அத்துடன் காரைநகரில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பிரதேச சபைத் தலைவர் ஆனைமுகன் அவர்கள் தலைமை வகித்ததுடன், மானிப்பாயில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் தலைமை வகித்தார். இக்கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், பா.கஜதீபன், சட்டத்தரணி சயந்தன், சர்வேஸ்வரன், அனந்தி, ஆனோல்ட் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். மேற்படி நான்கு கூட்டங்களிலும் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.   

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் உள்ளிட்ட 50ற்கும் மேற்பட்டோர் கைது-

IMG_6100 IMG_6101 IMG_6102 IMG_6105தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் வவுனியா நகர்ப்பகுதியில் இன்றுமுற்பகல் தொடங்கி மாலைவரை இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள், பிரதேச இளைஞர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மேற்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்றுமாலை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளையில் அங்கு வந்த வவுனியா பொலீசார் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்து வவுனியா பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்தின் பின்னர் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) உள்ளிட்ட அனைவரையும் அவர்களின் கையெழுத்தைப் பெற்று விடுதலை செய்துள்ளனர். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னம் தாங்கிய வாகனமும், அதன் சாரதியான தனராஜ் என்பவரும் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை. சாரதியையும் வாகனத்தையும் நாளை வவுனியா நீதிமன்றில் ஒப்படைக்க பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை கண்காணிப்பு குழுவினரும் அங்கு வருகைதந்து நிலைமைகள் தொடர்பில் கவனமெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கோயில் புதுக்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு-

IMG_0157 IMG_0159 IMG_0160 IMG_0161 IMG_0172 IMG_0174தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று வவுனியா கோயில் புதுக்குளம் கிராம முன்னேற்றச் சங்கக் கட்டிடத்தில் நேற்றுக்காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசு) மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதேவேளை நேற்றுமாலை 4.00 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் வவுனியா மகாறம்பைக்குளம் சிறீ முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினருடன் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார். இதன்போது குறித்த ஆலயத்திற்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தமைக்காக ஜி.ரி. லிங்கநாதன் அவர்கள் ஆலய பரிபாலன சபையினரால் கௌரவப்படுத்தப்பட்டார்.