கோயில் புதுக்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று வவுனியா கோயில் புதுக்குளம் கிராம முன்னேற்றச் சங்கக் கட்டிடத்தில் நேற்றுக்காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசு) மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதேவேளை நேற்றுமாலை 4.00 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் வவுனியா மகாறம்பைக்குளம் சிறீ முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினருடன் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார். இதன்போது குறித்த ஆலயத்திற்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தமைக்காக ஜி.ரி. லிங்கநாதன் அவர்கள் ஆலய பரிபாலன சபையினரால் கௌரவப்படுத்தப்பட்டார்.