யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் இன்று யாழ். சாவகச்சேரி பஸ் நிலையம், குப்பிளான், காரைநகர் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றது. சாவகச்சேரி பஸ் நிலையத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு சாவகச்சேரி நகரசபைத் தலைவர் தேவசகாயம்பிள்ளை அவர்கள் தலைமை வகித்ததுடன், குப்பிளானின் இடம்பெற்ற கூட்டத்திற்கு வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ் அவர்கள் தலைமை வகித்தார். அத்துடன் காரைநகரில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பிரதேச சபைத் தலைவர் ஆனைமுகன் அவர்கள் தலைமை வகித்ததுடன், மானிப்பாயில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் தலைமை வகித்தார். இக்கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், பா.கஜதீபன், சட்டத்தரணி சயந்தன், சர்வேஸ்வரன், அனந்தி, ஆனோல்ட் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். மேற்படி நான்கு கூட்டங்களிலும் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.